first review completed

நான்மணிமாலை

From Tamil Wiki
Revision as of 08:10, 2 November 2023 by Tamizhkalai (talk | contribs)

நான்மணிமாலை பிரபந்தம் என்னும் தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஒரு வகை. அந்தாதியாக நாற்பது செய்யுள்களில் அமையும் இவ்விலக்கியத்தில் வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் என்னும் பாவகைககளால் ஆன பாடல்களால் மாறி மாறி கோர்க்கப்பட்டு வருவதால் இது நான்மணிமாலை.

சில நான்மணிமாலை நூல்கள்

எடுத்துக்காட்டு

குமரகுருபரர் பாடிய திருவாரூர் நான்மணிமாலையில் இருந்து (காப்பு நீங்கலாக) முதல் ஐந்து பாடல்களும், எடுத்துக் காட்டாகத் தரப்பட்டுள்ளன. பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்திருப்பதைக் காணலாம். முதல் நான்கு பாடல்களும் வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் ஆகிய பாவகைகளில் அமைந்திருப்பதையும், ஐந்தாம் பாடல் மீண்டும் வெண்பாவாக அமைந்துள்ளதையும் காணலாம்.

திருவாரூர் நான்மணி மாலை

நேரிசை வெண்பா

நீரூர்ந்த முந்நீர் நிலவலய நீள்கொடிஞ்சித்
தேரூர்ந்த செல்வத் தியாகனே - ஆரூர
வீதிவிடங் காவடங்கா வேலைவிடம் போலுமதிப்
பாதிவிடங் காகடைக்கண் பார்த்து. 2

கட்டளைக் கலித்துறை

பார்பெற்ற வல்லிக்குப் பாகீ ரதிக்குமெய்ப் பாதியுமத்
தார்பெற்ற வேணியுந் தந்தார் தியாகர் தடம்புயத்தின்
சீர்பெற்றி லேமென்று நாணால் வணங்கிச் சிலையெனவும்
பேர்பெற்ற தாற்பொன் மலைகுனித் தாரெம் பிரானென்பரே. 3

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

என்பாக நகுதலையோ டெழிலாக
வணிந்தகம லேச மற்றுன்
றன்பாக மிடப்பாகத் தலை஢விகரு
விழிதோய்ந்துந் தலைவி பாகத்
தன்பாக நின்றிருநோக் கவைதோய்ந்துக்
திருநிறம்வே றாகை யாலப்
பொன்பாக மிதுவெனவு நின்பாக
மிதுவெனவும் புகலொ ணாதே. 4

நேரிசை ஆசிரியப்பா

ஒண்கதிர் பரப்புஞ் செங்கதிர்க் கடவுள்
வெயில்கண் டறியா வீங்குருட் பிழம்பிற்
புயல்கண் படுக்கும் பூந்தண் பொதும்பிற்
காவலர்ப் பயந்து பாதபத் தொதுங்கிய
இருவே றுருவிற் கருவிரன் மந்தி (5)

பொன்னிறம் பழுத்த பூஞ்சுளை வருக்கை
முன்னுறக் காண்டலு முளையெயி றிலங்க
மடித்தலத் திருத்தி வகிர்ந்துவள் ளுகிரால்
தொடுத்தபொற் சுளைபல வெடுத்துவாய் மடுப்பது
மானிட மடங்க றூணிடைத் தோன்றி (10)

ஆடகப் பெயரி னவுணன்மார் பிடந்து
நீடுபைங் குடரி னிணங்கவர்ந் துண்டென
இறும்பூது பயக்கு நறும்பணை மருதத்
தந்த ணாரூ ரெந்தையெம் பெரும
சிங்கஞ் சுமந்த செழுமணித் தவிசிற் (15)

கங்குலும் பகலுங் கலந்தினி திருந்தாங்
கிடம்பலம் பொலிந்த விறைவியு நீயும்
நடுவண் வைகு நாகிளங் குழவியை
ஒருவரி நெருவி ருள்ளநெக் குருக
இருவிருந் தனித்தனி யேந்தினிர் தழீஇ (20)

முச்சுடர் குளிர்ப்ப முறைமுறை நோக்கி
உச்சி மோந்துமப் பச்சிளங் குழவி
நாறுசெங் குமுதத் தேறலோ டொழுகும்
எழுதாக் கிளவியி னேழிசை பழுத்த
இழுமென் குரல மழலைத் தீஞ்சொற் (25)

சுவையமு துண்ணுஞ் செவிகளுக் கையவென்
பொருளில் புன்மொழி போக்கி
அருள்பெற வமைந்ததோ ரற்புத முடைத்தே. (28) 5

நேரிசை வெண்பா

தேங்குபுக ழாரூர்த் தியாகர்க்கெண் டிக்குமொளி
வீங்கு பகற்போது வெண்படமாம் - தூங்கிருள்சூழ்
கங்குற் பொழுது கரும்படமாஞ் செம்படமாம்
பொங்குற்ற புன்மாலைப் போது. 6

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.