காலசக்கரம் நரசிம்மா

From Tamil Wiki
Revision as of 20:38, 28 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|காலசக்கரம் நரசிம்மா காலசக்கரம் நரசிம்மா (டி ஏ நரசிம்மன்) தமிழ் எழுத்தாளர்.பொதுவாசிப்புக்கான நாவல்களை எழுதுகிறார். பெரும்பாலும் சரித்திரப் பின்னணி கொண்ட நாவல...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
காலசக்கரம் நரசிம்மா

காலசக்கரம் நரசிம்மா (டி ஏ நரசிம்மன்) தமிழ் எழுத்தாளர்.பொதுவாசிப்புக்கான நாவல்களை எழுதுகிறார். பெரும்பாலும் சரித்திரப் பின்னணி கொண்ட நாவல்கள்.

வாழ்க்கை

திரை எழுத்தாளர் சித்ராலயா கோபு- எழுத்தாளர் கமலா சடகோபன் இணையரின் மகன். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார்.

இலக்கியவாழ்க்கை

நரசிம்மன் எழுதிய முதல்நாவல் காலசக்கரம். அதிலிருந்து காலச்சக்கரம் நரசிம்மாவாக அறியப்படுகிறார். தொடர்ந்து நாவல்களை எழுதி வருகிறார்

திரையூடகம்

தொலைக்காட்சிகளுக்காக நரசிம்மா எழுதிக்கொண்டிருக்கிறார். திரைக்கதை வசனம் எழுதிய தொடர்கள்

  • கிருஷ்ணா காட்டேஜ்
  • அபிராமி
  • அனிதா வனிதா
  • மாயா

நூல்கள்

நாவல்கள்
  • காலசக்கரம்
  • ரங்கராட்டினம்
  • சங்கதாரா
  • பஞ்ச நாராயண கோட்டம்
  • கர்ணபரம்பரை
  • குபேரவன காவல்
  • அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா
  • அத்திமலைத்தேவன்
  • மூவிடத்து வானரதம்

உசாத்துணை

காலசக்கரம் நரசிம்மா அறிமுகம்.