ஆ. பூவராகம் பிள்ளை
ஆ. பூவராகம் பிள்ளை (27 நவம்பர் 1899 - 28 மே 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்ல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
பொருளடக்கம்
- 1ஆற்றிய பணிகள்
- 1.1இலக்கண உரையாசிரியர்
- 1.1.1படைப்புகள்
- 1.1இலக்கண உரையாசிரியர்
- 2சிறப்புகளும் விருதுகளும்
- 3மறைவு
- 4மேற்கோள்கள்
ஆற்றிய பணிகள்[தொகு]
சிதம்பரத்தில் உள்ள இராமசாமிசெட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
இலக்கண உரையாசிரியர்[தொகு]
தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி சேனாவரையர் உரை விளக்கம் என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.
படைப்புகள்[தொகு]
வைணவம் தொடர்பாக இவர் படைத்த நூல்கள்- திருவாய்மொழி விளக்கம், திருமங்கையாழ்வார் பெரிய திருமொழிஆகியன. மேலும்,' புலவர் பெருமை' எனும் நூலையும் இயற்றியுள்ளார்.
சிறப்புகளும் விருதுகளும்[தொகு]
தனிநாயக அடிகளார், பிள்ளையவர்களின் இலக்கணப் புலமையை அறிந்து, அவரைத் தூத்துக்குடிக்கு அழைத்து வீரமாமுனிவரின் ‘தொன்னூல் விளக்கம்’ எனும் இலக்கண நூலைப் பாடம் கேட்டதாகவும் சொல்லுவர்Dance master thayabaranDance master thayabaran[சான்று தேவை]. 16-8-1930 இல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசளித்து சிறப்பித்துள்ளது.
மறைவு[தொகு]
மே 28, 1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ நூல்:தமிழ்ச் சொல்லாக்கம், ஆசிரியர்: உவமைக் கவிஞர் சுரதா, பக்கம்: 190 [1]
- ↑ தொல்காப்பியப் பதிப்பாசிரியர்கள் பரணிடப்பட்டது 2016-03-17 at the வந்தவழி இயந்திரம், முனைவர் இரா. வெங்கடேசன், நாள்: மே 15, 2015.
- ↑ [2]
- ↑ திருவாய்மொழி விளக்கம்: திருசிராப்பள்ளி வானொலியிற் பேசப்பெற்றவை, கூகுள் புக்சு
- ↑ சீர்காழி வி.இராம்தாஸ்,' ஸ்ரீகாசிமடம் அருள் வரலாறு'
- முனைவர் க.முருகேசன்,' இலக்கணச் சிங்கம் ஆ.பூவராகம்பிள்ளை, தினமணி- தமிழ்மணி 25-5-14.