under review

பொ. முத்தையபிள்ளை

From Tamil Wiki
Revision as of 09:41, 21 October 2023 by Logamadevi (talk | contribs)

பொ. முத்தையபிள்ளை (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சைவநூல் ஆராய்ச்சியாளர். தசகாரிய விளக்கம் முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

தூத்துக்குடி திருமந்திர நகரில் பொன்னம்பலம்பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். இளமைக்கல்வி, புலமைக்கல்வி, சைவ சித்தாந்த நூல்களைக் கற்றார்.

ஆன்மீகம்

தேவக்கோட்டையில் சிவாகம சங்கத்தை நிறுவினார். சைவ சமயத் தொண்டு செய்தார். தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையின் உப தலைவராகவும், மதுரை தமிழ்ச்சங்கத்து உறுப்பினராகவும் இருந்தார். திருவாடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாணார் தேசிகர் "திருவாடுதுறை ஆதீன சைவப் பிரகாசர்" என்று பட்டமளித்து திருக்கோயில்களுக்கு சொற்பொழிவுகளுக்காக அனுப்பினார்.

இலக்கிய வாழ்க்கை

சைவநூல் ஆராய்ச்சியாளர். சைவ சமய சொற்பொழிவுகளைச் செய்தார். சிவஞான சித்தியாருக்குப் பொழிப்புரை, தசகாரிய விளக்கம் போன்ற நூல்களையும், மறுப்புரைகளும் எழுதினார். சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய ஸ்வாமிகள் தசகாரிய விளக்கத்திற்கு சிறப்புப்பாயிரம் எழுதியுள்ளார்.

நூல் பட்டியல்

  • சிவஞான சித்தியாருக்குப் பொழிப்புரை
  • தசகாரிய விளக்கம்

உசாத்துணை


✅Finalised Page