சா.ராம்குமார்

From Tamil Wiki
Revision as of 14:33, 22 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "சா.ராம்குமார் ( ) ராம்குமார் தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றுபவர் == பிறப்பு, கல்வி == ராம்குமா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சா.ராம்குமார் ( ) ராம்குமார் தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றுபவர்

பிறப்பு, கல்வி

ராம்குமார் கர்னாடகா மாநிலத்தில் மைசூரில் 19.செப்டெம்பர் 1987 ல் சாத்தூரப்பன்,.விஜயாம்பாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக்கல்வி 2003 வரை கோவையில் உள்ள நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி. மேல்நிலைக்கல்வி 2005 ல் கோவையில் உள்ள ஸ்டேன்ஸ் மேல் நிலைப்பள்ளி. உளவியல் இளங்கலை (2008) கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்.சமூகப்பணியியல் முதுகலை 2010 சென்னை சமூகப்பணிக் கல்லூரி.

தனிவாழ்க்கை

ராம்குமார் அபினயாவை 09.மே.2016 ல் மணந்தார். ஒரு மகன் வீரநாராயண். இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்த ராம்குமார். இணைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துதுறையாக பணியாற்றினார். பின்னர் இயக்குனர், மேகாலயா அரசு நிர்வாகப் பயிற்சி மையத்தில் பணியாற்றினார்

இலக்கியவாழ்க்கை

ராம்குமாரின் முதல் படைப்பு ’அகதி’ என்னும் சிறுகதை தொகுப்பு. தமிழினி பதிப்பகம் இதை 2020ல் வெளியிட்டது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்ரன், கி.ராஜ நாராயணன், ஜெயமோகன்ஆகியோர் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்தினர் என்கிறார்.

நூல்பட்டியல்

  • ‘அகதி’ சிறுகதை தொகுப்பு. தமிழினி பதிப்பகம் (2020)
  • ‘தேவியின் தேசம்’, பயண இலக்கியம், தமிழினி பதிப்பகம் (2021)