விஷால்ராஜா

From Tamil Wiki
Revision as of 12:58, 22 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "விஷால்ராஜா (26 நவம்பர் 1993 ) தமிழில் புனைகதைகளும் இலக்கிய விமர்சனக்கட்டுரைகளும் எழுதிவரும் எழுத்தாளர். இலக்கிய வடிவிலும் மொழியிலும் புதிய முயற்சிகளை மேற்கொள்பவராக மதிப்பிடப்ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

விஷால்ராஜா (26 நவம்பர் 1993 ) தமிழில் புனைகதைகளும் இலக்கிய விமர்சனக்கட்டுரைகளும் எழுதிவரும் எழுத்தாளர். இலக்கிய வடிவிலும் மொழியிலும் புதிய முயற்சிகளை மேற்கொள்பவராக மதிப்பிடப்படுகிறார்

பிறப்பு, கல்வி

விஷால்ராஜா சென்னை அருகே திருநின்றவூரில் 26 நவம்பர் 1993 ல் பொ.சுந்தரேசன்- சு.எஸ்தர் ராணி இணையருக்கு பிறந்தார். புனித யோவான் மெட்ரிக் பள்ளி, திருநின்றவூரில் பள்ளிக்கல்வியும் ஆவடி  வேல்டெக் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார்

தனிவாழ்க்கை

விஷால்ராஜா திருநாமதீபாவை 17 மே 2021 அன்று மணந்தார். பெங்களூரில் மென்பொருள் பொறியியலாளர்

இலக்கியவாழ்க்கை

விஷால்ராஜா 2011 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். உயிர் எழுத்து மாத இதழில் 2013ல் பிரசுரமான  ‘ஞாபகங்களின் கல்லறை’ முதல்படைப்பு. தன் எழுத்தின் மீதான செல்வாக்கு பற்றிச் சொல்லும்போது  புதுமைப்பித்தன், அசோகமித்திரன்,வண்ணதாசன், ஜெயமோகன், தஸ்தாயெவ்ஸ்கி, அமெரிக்க எழுத்தாளர் மெரிலின் ராபின்சன் ஆகியோரை குறிப்பிடுகிறார்

இலக்கிய இடம்

விஷால்ராஜா உருவகத்தன்மை கொண்ட கதைகளை செறிவான மொழியில் எழுதுபவர்.அன்றாட வாழ்க்கையை விட அதன் அடிப்படைகளை ஆராயும் மெய்யியல்நோக்கை முதன்மைப்படுத்துபவர். சமகாலப் படைப்பாளிகள் பற்றியும் மேலை இலக்கிய மேதைகள் பற்றியும் விரிவான விமர்சனக்கட்டுரைகளை எழுதுகிறார்