சுதேச நாட்டியம்
சுதேசநாட்டியம் (1902- ) யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த இலங்கைத் தமிழ் இதழ். இலங்கையின் தமிழ் இதழ்களில் தொன்மையான ஒன்று. இதை ஆசுகவி என பெயர்பெற்ற கல்லடி வேலுப்பிள்ளை நடத்தினார்.
வரலாறு
கல்லடி வேலுப்பிள்ளை தன் நாற்பதாவது வயதில் சென்னையில் வாங்கிய அச்சு இயந்திரத்தை தானே இயக்கி 1902ல் சுதேச நாட்டியம் என்னும் இதழை தொடங்கினார்.
இலக்கிய இடம்
சுதேசநாட்டியம் இதழ் பற்றி ”தமிழின் மாட்சிக்கும், தமிழ்ச் சமுதாயத்தின் மேன்மைக்கும் களம் அமைத்துக் கொடுப்பதை கருப்பொருளாகக் கொண்டிருந்தது. தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய சீர்கேடுகளையும், சமயக் குறைபாடுகளையும், இலக்கியத் தாழ்வுகளையும் தயவுதாட்சணியமின்றி அம்பலப்படுத்தியது. போலிகளைப் புறந்தள்ளித் தூயவழியில் பத்திரிகை தர்மத்தை பேணிக்காத்த பெருமை இப்பத்திரிகைக்கு உண்டு.” என ‘ஈழத்துத் தமிழ் அறிஞர்கள்” என்னும் நூலில் கவிஞர் த.துரைசிங்கம் பதிவு செய்துள்ளார்.