first review completed

கோகுல் பிரசாத்

From Tamil Wiki
Revision as of 10:13, 24 February 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)
File:Gokul.jpg
கோகுல்பிரசாத்

கோகுல் பிரசாத் (டிசம்பர் 23, 1991) தமிழில் திரைப்பட ஆராய்ச்சிகளும் இலக்கியவிமர்சனங்களும் எழுதிவரும் எழுத்தாளர். தமிழினி இலக்கிய இணைய இதழின் ஆசிரியர். கோவையில் வாழ்கிறார்.

பிறப்பு, இளமை

கோகுல்பிரசாத் டிசம்பர் 23, 1991 அன்று சிவகாசியில் பார்த்தசாரதி, சந்திரலீலா இணையருக்கு பிறந்தார். பெற்றோரின் பணிமாற்றம் காரணமாக பிறந்ததிலிருந்தே கோவையில் வளர்ந்தார். ஐந்தாம் வகுப்பு வரை வீரபாண்டி பிரிவிலுள்ள இமாகுலேட் மேல்நிலைப் பள்ளியிலும் ஆறிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பின்னர் திண்டுக்கல் அருகே உள்ள பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் பொறியியல் கற்றார். மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் பிரிவு.

தனிவாழ்க்கை

கோகுல்பிரசாத்தின் மனைவி பெயர் பிரபா, மே 24, 2019 அன்று மணம்புரிந்துகொண்டார். கோவையில் வணிகம் செய்துவருகிறார்.

இலக்கியவாழ்க்கை

கோகுல்பிரசாத் தமிழில் இலக்கிய விமர்சனக்குறிப்புகளையும் திரைவிமர்சனங்களையும் எழுதி வருகிறார். மாயா வேட்டம் என்னும் தலைப்பில் உலகத் திரைப்படத் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு 2022-ஆம் ஆண்டு வெளியாகியிருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் தன் ஆதர்சங்கள்: அ.மாதவையா, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, அசோகமித்திரன், ஜெயமோகன், சு.வேணுகோபால். உலகளவில் தல்ஸ்தோய், விக்ட்ர் ஹ்யூகோ, செகாவ், பால்சாக், எமில் சோலா, ஹெர்மன் ஹெஸ்ஸே, தாமஸ் மன், மார்சல் ப்ரூஸ்ட், பொலான்யோ ஆகியோரை குறிப்பிடுகிறார்.

இதழியல்

கோகுல் பிரசாத் ஜூலை 2018 முதல் தமிழினி என்னும் இணைய இதழை நடத்திவருகிறார்.

நூல்பட்டியல்

  • மாயா வேட்டம் - சினிமாக் கட்டுரைகள்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.