சைவ ஆகமங்கள்

From Tamil Wiki
Revision as of 12:41, 6 September 2023 by Ramya (talk | contribs) (Created page with "சைவ ஆகமங்கள் என்பது சைவ சித்தாந்தத்தின் மூல நூல்கள். ஆகமம் என்னும் சொல்லுக்கு ‘அவ்வாறே வந்தமைந்தது’ என்று பொருள். == தோற்றம் == மாணிக்கவாசகர் ஆகமம் ஆகி நின்று அன்னிபான் எனவும் ம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சைவ ஆகமங்கள் என்பது சைவ சித்தாந்தத்தின் மூல நூல்கள். ஆகமம் என்னும் சொல்லுக்கு ‘அவ்வாறே வந்தமைந்தது’ என்று பொருள்.

தோற்றம்

மாணிக்கவாசகர் ஆகமம் ஆகி நின்று அன்னிபான் எனவும் மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோற்றுவித்தருளியும் எனப் பாடுகின்றார்.

திருமூலர்ஆகமம் பற்றிக் கூறியதை சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே என்ற குறிப்பு தெளிவுபடுத்துகின்றது. திருமூலர் இறைவனால் ஆகமம் அருளப்பட்டதை தானாய் அடியார்கள் அர்ச்சிக்கும் நந்தி உருவாகி ஆகமம் ஓங்கி நின்றாளே என்றும் கூறுகின்றார். அதில் திருமூலர் சைவ ஆகமம் என்பது சிவபெருமானிடமிருந்து வந்தது என்கிறார்.

சைவ ஆகமங்கள் பற்றி

சைவ ஆகமங்கள் என்பவை சிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தினையும், சிவாலயம் அமைக்கும் விதம், பூஜை முறைகள், அபிசேகம், அலங்கார கொள்கைகளையும் விளக்குகின்றன.

சைவ ஆகம பிரிவுகள்

சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28. உப ஆகமங்கள் 207. நடைமுறையில் காரண ஆகமம், காமிய ஆகமம், மகுடஆகமம், வாதுள ஆகமம், சுப்ரபேத ஆகமம் ஆகியவை மட்டுமே கிடைக்கின்றன. இதிலும் காமிய ஆகமமே பெரும்பாலான கோவில்களில் பின்பற்றப்படுகிறது. அதைவிடக் குறைந்த அளவில் காரண ஆகமம் பின்பற்றப்படுகிறது. சைவ ஆகமங்களை சிவபேத ஆகமங்கள், ருத்ரபேத ஆகமங்கள் என இரு வகையாகப் பிரிக்கலாம்.

சிவபேத ஆகமங்கள் (10)
  • சிவபேத ஆகமங்கள்
  • காமிக ஆகமம்
  • யோகஜ ஆகமம்
  • சிந்திய ஆகமம்
  • காரண ஆகமம்
  • அஜித ஆகமம்
  • தீப்த ஆகமம்
  • சூட்சும ஆகமம்
  • சகஸ்ர ஆகமம்
  • அஞ்சுமான் ஆகமம்
  • சுப்ரபேத ஆகமம்
  • ருத்திரபேத ஆகமங்கள்
ருத்ரபேத ஆகமங்கள் (18)
  • விஜய ஆகமம்
  • நிஸ்வாச ஆகமம்
  • சுயம்பூத ஆகமம்
  • ஆக்னேய ஆகமம்
  • வீர ஆகமம்
  • இரௌரவ ஆகமம்
  • மகுட ஆகமம்
  • விமல ஆகமம்
  • சந்திரஞான ஆகமம்
  • முகவிம்ப ஆகமம்
  • புரோற்கீத ஆகமம்
  • லலித ஆகமம்
  • சித்த ஆகமம்
  • சந்தான ஆகமம்
  • சர்வோத்த ஆகமம்
  • பரமேசுவர ஆகமம்
  • கிரண ஆகமம்
  • வாதுள ஆகமம்