under review

தேவராய சுவாமிகள்

From Tamil Wiki
Revision as of 10:43, 6 September 2023 by Ramya (talk | contribs) (Created page with "தேவராய சுவாமிகள் (தேவராயன்) (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். கந்தஷஷ்டி கவசம் எழுதியவர். == வாழ்க்கைக் குறிப்பு == தேவராய சுவாமிகள் 1857-இல் தொண்டை மண்டலம் வல்லூரில் வீரசாமிப்பி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தேவராய சுவாமிகள் (தேவராயன்) (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். கந்தஷஷ்டி கவசம் எழுதியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தேவராய சுவாமிகள் 1857-இல் தொண்டை மண்டலம் வல்லூரில் வீரசாமிப்பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். பெங்களூரில் மைசூர் அரசரிடம் கணக்கர் வேலை பார்த்தார். சைவ சமயத்தைச் சேர்ந்தவர். இவரின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

இலக்கிய வாழ்க்கை

தேவராய சுவாமிகள் கந்தசுவாமி மேல் துதியாக கந்தஷஷ்டி கவசம் எழுதினார். காப்பு வெண்பா இரண்டையும் 238 அடிகளைக் கொண்ட நில மண்டில ஆசிரியப்பாவினையும் உடையது. கந்தசஷ்டி கவசத்திற்கு சக்காடு இரத்தினவேல் முதலியார் மகன் சபாபதி முதலியார் விருத்தியுரை எழுதினார்.

நூல் பட்டியல்

  • கந்தஷஷ்டி கவசம்
  • சிவ கவசம்
  • சண்முக கவசம்
  • சக்தி கவசம்
  • குசேலோபாக்கியானம்
  • நாராயண கவசம்

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.