being created

மதுரை ஆதீனம்

From Tamil Wiki
Revision as of 13:52, 19 August 2023 by Ramya (talk | contribs) (Created page with "மதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் சைவ சமயத் திருமடங்களில் ஒன்று. திருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்தியதாக நம்பிக்கை உள்ளது. == வரலாறு == மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் சமண மதத்தைத் தழுவி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் சைவ சமயத் திருமடங்களில் ஒன்று. திருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்தியதாக நம்பிக்கை உள்ளது.

வரலாறு

மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் சமண மதத்தைத் தழுவிய போது அவனது ஆட்சிக்குட்பட்ட பாண்டிய நாட்டின் பகுதி முழுவதும் சமண மதமாக இருந்தது. சிவாலயங்களில் பூசைகள் நடைபெறவில்லை. மக்கள் மத்தியில் சிவ வழிபாடு குறைந்தது. சைவ சமயத்தில் பற்றுக் கொண்ட கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசியும் மந்திரி குலச்சிறையாரும் சிவபக்தர். இவர்கள் திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தனர்.

மதுரைக்கு வந்த திருஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குத் தீ வைத்தனர். சம்பந்தர் மடத்தை விட்டு வெளியில் வந்து ஆலவாய் அண்ணலை தேவாரப்பதிகப் பாடலால் வேண்டினார். நெருப்பு வெப்பு நோயாக மாறிக் கூன்பாண்டியனை வாட்டியது. சமணர்கள் மன்னனின் நோயைக் குணப்படுத்த பல முயற்சி செய்தும் பலனில்லை. திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடி மன்னனின் வெப்பு நோயைக் குணப்படுத்தினார். சமணர்களுடன் அனல்வாதம் புனல்வாதம் என அனைத்திலும் ஞானசம்பந்தர் வென்று கூன்பாண்டியனின் கூன் முதுகு நோயை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக மாற்றினார். ஞானசம்பந்தர் சைவத்தையும், தமிழையும் மதுரையில் மீண்டும் நிலைநாட்டினார். இவை சேக்கிழாரின் பெரிய புராணத்திலும், சுந்தரரின் திருத்தொண்டர் தொகையிலும், நம்பியாண்டார்நம்பிகளின் திருத்தொண்டர் அந்தாதியிலும் உள்ளது. தமிழகத் திருக்கோயில் கல்வெட்டுகள் மற்றும் தேவாரப்பதிகப் பாடல்கள் ஆகியவற்றில் இவ்வரலாற்றுச் செய்திகள் உள்ளன.

பீடாதிபதி

மதுரை ஆதீனத்தை நிர்வகிப்பவர்கள் பீடாதிபதிகள் என்று அழைக்கப்பட்டனர்.

  • 291 சோமசுந்தர தேசிகர்
  • 292 அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி (ஆகஸ்ட் 13, 2021 வரை)
  • 293 ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (ஆகஸ்ட் 23, 2021 முதல் தற்போது வரை)

மதுரை ஆதீன மீட்புக்குழு

மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி தனக்கு அடுத்த பீடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்ததைக் கண்டித்து தமிழகத்தின் இதர திருமடங்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பின. பிற திருமடங்களின் ஆதரவுடன் நெல்லை கண்ணனை தலைமையாக கொண்ட மதுரை ஆதீன மீட்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மதுரை ஆதீனத்திலிருந்து நித்தியானந்தா உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்; புதிய ஆதீனத்தை தமிழகத்தின் மற்ற ஆதீன மடங்களை கலந்தாலோழித்து தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டிசம்பர் 19, 2012-இல் நித்தியானந்தா பீடாதிபதி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

கோயில்கள்

  • கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (தஞ்சாவூர்)
  • திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் (தஞ்சாவூர்)
  • கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில் (திருவாரூர்)
  • மீனாட்சி அம்மன் கோவில் (மதுரை)

உசாத்துணை

  • மதுரை ஆதீன மீட்புக்குழு மாநாடு தீர்மானம்: தினமணி



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.