being created

ஆதீனம்

From Tamil Wiki
Revision as of 11:15, 19 August 2023 by Ramya (talk | contribs) (Created page with "ஆதீனம் என்பது சைவ மடங்கள். சைவ சித்தாந்தம், தமிழ் மொழியை வளர்க்கவும், அதை மக்களிடையே பரப்பவும் தோற்றுவிக்கப்பட்டவை. இந்த மடங்களின் தலைவர்கள் ஆதீனகர்த்தர்கள். == தோற்றம் == பொ.யு. 1...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஆதீனம் என்பது சைவ மடங்கள். சைவ சித்தாந்தம், தமிழ் மொழியை வளர்க்கவும், அதை மக்களிடையே பரப்பவும் தோற்றுவிக்கப்பட்டவை. இந்த மடங்களின் தலைவர்கள் ஆதீனகர்த்தர்கள்.

தோற்றம்

பொ.யு. 14-ஆம் நூற்றாண்டில் திருவாவடுதுறை ஆதீனம் முதலில் தோன்றிய ஆதீனம். அதிலிருந்து தருமபுரம் ஆதீனம் தோன்றியது. தருமபுர ஆதீனத்திலிருந்து வேறு சில ஆதீனங்கள் தோன்றியது. சில ஆய்வாளர்கள் மதுரை ஆதீனமே பழமையானது என்றும், 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் இந்த மடத்தை தோற்றுவித்ததாகவும் கருதினர்.

பொருளாதாரம்

மடங்களை காப்பதற்காக நிலப்பிரபுக்களும், செல்வந்தர்களும், பக்தர்களும் நிலங்களை மடத்தின் பெயரில் எழுதி வைத்தனர். அந்த நிலங்களை குத்தகைக்கு விட்டு அதிலிருந்து மடங்களுக்கு வருவாய் வருகிறது. இந்த வருவாயை சில சைவ கோயில்களை பராமரிக்கவும் தமிழ் வளர்ப்பு பணிகளிலும் இவர்கள் செலவிட்டு வந்தனர்.

தமிழ்மொழிக்கான பங்களிப்பு

திருவாவடுதுறை ஆதீனம் போன்ற ஆதீனங்கள் தமிழ் வளர்ப்பு பணியில் ஈடுபட்டது. தருமபுர ஆதீனம் வடமொழி சார்ந்த வளர்ச்சிப்பணிகளை செய்தது. காரைக்கால் அம்மையார், திருஞான சம்பந்தர் போன்றோர் தமிழில் பாடும் வழக்கத்தை செயல்படுத்தியது. திருவாவடுதுறையின் பண்டிதராக இருந்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, இவரது சீடர் உ.வே. சாமிநாதையர் தமிழ் வளர்ச்சிப்ப்பணிகளை மேற்கொண்டனர்.

சைவம் என்பது தமிழ் மரபு சார்ந்து வர்ணாசிரமத்திற்கு உடன்படாமல் திருஞானசம்பந்தர், காரைக்கால் அம்மையார் தொடங்கி சாதி மறுப்பில் இயங்கிற்று. சாதி மறுப்புதான் சைவ சித்தாந்தக் கொள்கையாக உள்ளது. அதாவது தமிழை முன்னிலைப்படுத்தி சாதி மறுப்பாக தொடங்கப்பட்ட ஒரு சித்தாந்தம் என அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.

பட்டினப் பிரவேசம்

பட்டினப் பிரவேசம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து மடங்களை சுற்றியுள்ள வீதிகளில் வலம் வருவது.

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.