under review

சிவஞான தேசிகர்

From Tamil Wiki
Revision as of 16:56, 18 August 2023 by Ramya (talk | contribs) (Created page with "சிவஞான தேசிகர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவப் புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == சிவஞான தேசிகர் காசியில் பிறந்தார். தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த வித்துவான். ==இலக்கிய வா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சிவஞான தேசிகர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவஞான தேசிகர் காசியில் பிறந்தார். தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த வித்துவான்.

இலக்கிய வாழ்க்கை

சிவஞான தேசிகர் காசித்துண்டி விநாயகர் திருவருட்பா என்ற பெயரில் பத்து கழிநெடில் விருத்தங்களைப் பாடினார். யாழ்ப்பாணம் நல்லூர் சதாசிவம்பிள்ளை இதனைப் பதிப்பித்தார். பத்து விருத்தங்கள் கொண்ட காசிக்கதிர்மாவேலர் திருவருட்பா பாடினார்.

பாடல் நடை

  • காசித்துண்டி விநாயகர் திருவருட்பா

ஓங்கார வடிவான வுன்பாத தாமரையும்
உபயபரி புரமறைகளு முதிக்கின்ற செங்கதிர்க ளொருகோடி நிகரொளியு
முத்தூள நீற்றினுெளியும்
பாங்கார் கசானனமு முக்கரமும் வளர்புயப்
பவளா சலங்களுன்கும்
பாசமுட னங்குசக் கொம்போரி லட்டுகம்
பட்சமொடு வைத்தகரமும்
நீங்காத வருண்மாரி பொழியுந்த்ரி யம்பகமு
நிறையுமும் மதமாரியு
நீள்சடா டவியும்வெண் பிறையுமொரு தொந்தியு
நெஞ்சிலொரு நாளுமறவேன்
காங்கேயன் மகிழ்தமைய னேகங்கை நதிபெருகு
காசிவாழ் துண்டிராச
கணபதி யெனும்பெரிய குணமேரு வேயருட்
கருஞநிதிக் கடவுளே.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.