under review

சமண முனிவர்

From Tamil Wiki
Revision as of 21:26, 13 August 2023 by Ramya (talk | contribs) (Created page with "சமண முனிவர் (பொ.யு. 12-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். பவணந்தியின் நன்னூலுக்கு உரை எழுதினார். == வாழ்க்கைக் குறிப்பு == சமண முனிவர் பவணந்தி முனிகளின் மாணவர். உண்மையான பெயர் தெரியவில்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சமண முனிவர் (பொ.யு. 12-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். பவணந்தியின் நன்னூலுக்கு உரை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சமண முனிவர் பவணந்தி முனிகளின் மாணவர். உண்மையான பெயர் தெரியவில்லை. சமண சமயத்தைச் சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

சமண முனிவர் நன்னூலுக்கு “மலர்தலை உலகின் மல்கிரு ளகல” என்ற சிறப்புப்பாயிரம் பாடினார். நன்னூலுக்கு முதன்முதலில் உரை எழுதினார்.

பாடல் நடை

  • நன்னூல் சிறப்புப்பாயிரம்

மலர்தலை உலகின் மல்கிருள் அகல
இலகொளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியி னொருதா னாகி முதலீறு
ஒப்பளவு ஆசை முனிவிகந் துயர்ந்த
அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின்
மனஇருள் இரிய மாண்பொருள் முழுவதும்
முனிவற அருளிய மூஅறு மொழியுளும்
குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்
அரும்பொரு ளைந்தையும் யாவரும் உணரத்
தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார்
இகலற நூறி யிருநில முழுவதும்
தனதெனக் கோலித் தன்மத வாரணம்
திசைதொறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க்
கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்
திருந்திய செங்கோற் சீய கங்கன்
அருங்கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தன னாக முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்
பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி
என்னு நாமத் திருந்தவத் தோனே

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.