being created

கும்பேசர் குறவஞ்சி

From Tamil Wiki
Revision as of 07:31, 4 August 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "கும்பேசர் குறவஞ்சி (பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) கும்பகோணத்தில் கோவில் கொண்ட கும்பேசரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்த நூல்....")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கும்பேசர் குறவஞ்சி (பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) கும்பகோணத்தில் கோவில் கொண்ட கும்பேசரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்த நூல்.

ஆசிரியர்

கும்பேசர் குறவஞ்சியை இயற்றியவர் பாபநாச முதலியார். பாபநாச முதலியார் கும்பகோணத்தில் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வசித்தவர். அந்நகரத்தில் வாணாதுறை வடக்கு வீதியில் ஸ்ரீமான் திருவேங்கடம் பிள்ளை என்பவர் வசித்திருந்தவீடு இவர் வீடென்று சில பத்திரங்களால் தெரியவந்தது. இவர்காலத்தில் தஞ்சையில் மராட்டியர் ஆட்சி செய்தனர். ஏகோஜி என்ற மராட்டிய மன்னரை இவர் இந்நூலில் (பாட்டு 6, 43) பாடியுள்ளார்.

நூல் அமைப்பு

கும்பேசர் குறஞ்சி கும்பகோணத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கும்பேசர் மீது குடந்தைப் பாபநாச முதலியாரால் இயற்றப்பட்டது. இடையிடையே வெண்பா, அகவல், விருத்தம், கொச்சக்கலிப்பா, கட்டளைக்கலிப்பா, கட்டளைக்கலித்துறை முதலியபா வகைகளோடு கீர்த்தனைகளாக எழுதப்பட்டது.

கும்பேசர் மீது ஒரு நாயகி காதல் கொண்டு விரக தாபத்தால் துன்பமடைகிறாள். நிலவையும் தென்றலையும் மன்மதனையும் வெறுத்துப் புலம்புகிறாள். அப்போது ஒரு குறத்தி வந்து தன் நாட்டு வளத்தையும் மலை வளத்தையும் சொல்லிக் குறி கூறுகிறாள்: 'கும்பநாதர் உனக்கு அருள் செய்வார்' என்று சொல்லுகிறாள். அப்போது அவளைத் தேடிக் கொண்டு அவள் நாயகனாகிய குறவன் வருகிறான். குறத்தியும் குறவனும்சேர்ந்து கும்பேசரைத் துதிக்கிறார்கள். இதனோடு நாடகம் முடிகிறது.



நிகழ்த்து கலையாக

கும்பேசர் குறவஞ்சி நாடகத்தைக் கும்பகோணத்திலிருந்த கோப்பு நடராஜ செட்டியார் என்பவர் நடனக்கலைஞர்களைக்கொண்டு மாசிமகத் திருவிழாவின்போது நடைபெறச்செய்தாரென்று பாயிரச் செய்யுள் தெரிவிக்கிறது.


Read more at: https://shaivam.org/scripture/Tamil/1935/kumbesar-kuravanchi-drama-text/#gsc.tab=0

பாடல் நடை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.