being created

கமலாதாஸ்

From Tamil Wiki
Revision as of 16:17, 18 July 2023 by Ramya (talk | contribs) (Created page with "கமலாதாஸ் (கமலா சுராயா) (மாதவிக்குட்டி) (மார்ச் 31, 1934 - மே 31, 2009) மலையாள எழுத்தாளர். ஆங்கிலம், மலையாளத்தில் சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். == பிறப்பு, கல்வி == கமலாதாஸ் கேரளமாநிலம் மலபாரில...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கமலாதாஸ் (கமலா சுராயா) (மாதவிக்குட்டி) (மார்ச் 31, 1934 - மே 31, 2009) மலையாள எழுத்தாளர். ஆங்கிலம், மலையாளத்தில் சிறுகதைகள், கவிதைகள் எழுதினார்.

பிறப்பு, கல்வி

கமலாதாஸ் கேரளமாநிலம் மலபாரில் புன்னயூர்க்குளத்தில் வி.எம்.நாயர், நலபாத் பாலாமணி அம்மா இணையருக்கு மகளாக மார்ச் 31, 1934-ல் பிறந்தார். தந்தை மாத்ருபூமி மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர். தாயார் மலையாள கவிஞர்.

தனிவாழ்க்கை

கமலாதாஸ் தன் 15வது வயதில் மாதவ்தாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிள்ளைகள் எம்.டி.நலபட், சினேன் தாஸ், ஜெயசூர்யா தாஸ். எம்.டி.நலபட் ஓர் எழுத்தளர், பத்திரிகை ஆசிரியர். மாதவ்தாஸ் 1993-ல் காலமானார். கமலாதாஸ் கேரள சாகித்ய அகடமியின் துணை தலைவர் பதவி வகித்தார்.

ஆன்மிகம்

கமலாதாஸ் 1999-ல் இஸ்லாம் மாதத்திற்கு மாறினார். தனது பெயரை கமலாசுரையா என்று மாற்றிக்கொண்டார்.

அரசியல் வாழ்க்கை

அனாதையாக்கப்பட்ட தாய்மார்களின் நலனுக்கும், நாட்டின் மதசார்பற்ற கொள்கையை நிலைத்திட செய்ய லோக் சேவா பார்டி என்ற கட்சியை தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

இலக்கிய வாழ்க்கை

கமலாதாஸ் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதினார். இவரின் முதல் கவிதை 'கல்கத்தாவில் கோடைகாலம்' 1965-ல் வெளியானது.'வம்சத்தவர்' என்ற தொகுப்பு 1967-ல் வெளிவந்தது இது பெண்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை பெற்றது. மலையாளத்தில் ’என் கதா’ (My Story) என்ற நூலை எழுதினார். இந்த புத்தகம் சுயசரிதையாக கருதப்படுகிறது. இந்த புத்தகம் ஆங்கிலத்திலும், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

விருதுகள்

  • 1963-ல் பென் ஏசியன் பொயட்ரி விருது
  • 1968-ல் கேரளா சாகித்ய அகடாமி விருது – தனுப்பு
  • 1984-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யபட்டது
  • 1985-ல் சாகித்ய அகாடமி விருது (ஆங்கிலம்)– கவிதை தொகுப்பு
  • 1988-ல் கேரள அரசின் சிறந்த கதைக்கான விருது
  • 1997-ல் வயலார் விருது – நீர்மதலாம் பூத களம்
  • 2006-ல் கவ்ரவ டாக்டர் பட்டம் (D.Litt by கோழிக்கோடு பல்கலைகழகம்
  • 2006-ல் முட்டதே வர்கே விருது
  • 2009-ல் எழுதச்சன் விருது

எழுதிய நூல்கள்

ஆங்கிலம்

நாவல்

1976: ஆல்பபெட் ஆஃப் லஸ்ட்

சுயசரிதை

1976: என் கதை

சிறு கதைகள்

1977:ஏ டால் ஃபார் தி சைல்ட் ப்ராஸ்டிடியு 1992: பதமாவதி தி ஹர்லோட் அண்ட் அதர்ஸ் ஸ்டோரி

கவிதை தொகுப்பு

1964: தி சைரேன்ஸ் 1965: சம்மர் இன் கல்கட்டா 1967: தி டிசண்டன்ஸ் 1973: தி ஓல்ட் ப்ளேஹவுஸ் அண்ட் அதர்ஸ் போயம்ஸ் 1977: தி ஸ்ட்ரேஞர் டைம் 1979: டுநைட், திஸ் சாவேஜ் ரைட் 1984: கலெக்டட் போயம்ஸ் 1985: தி அண்ணாமலை போயம்ஸ் 1997: ஒஒன்லி தி சோல் நௌஸ் ஹவ் டோ சிங் 1999: மை மதர் அட் சிக்ஸிடி சிக்ஸ் 2001: யா அல்லாஹ்

மலையாளம்

1964: பக்ஷியுடைய மனம் (சிறு கதைகள்) 1968: தனுப்பு (சிறு கதை) 1982: என் காத (சுய சரிதை) 1987: பால்யகால ஸ்மரணகள் (குழந்தைக் கால நினைவுகள்) 1989: வருசங்களுக்கு முன்பு (நாவல்) 1990: பலயன் (நாவல்) 1991: நெநெய் பாயசம் (சிறு கதை) 1994: நிர்மாதளம் பூத்தகாலம் (நாவல்) 1996: கடல் மயூரம் (சிறு நாவல்) 1996: ரோகினி (சிறு நாவல்) 1996: அட்டுகட்டில் (சிறு நாவல்) 1998: நஷ்டபட்ட நீலாம்பரி (சிறு நாவல்) 2005:சந்தன மரங்கள் (நாவல்) 2005: வண்டிகலக்கல் (நாவல்)

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.