first review completed

பாண்டமங்கலம் ஜி. யுவராஜ்

From Tamil Wiki
G. Yuvaraj.jpg

பாண்டமங்கலம் ஜி. யுவராஜ் (பிறப்பு மே 09, 1990) ஒரு நாதஸ்வரக் கலைஞர். திருக்கடையூர் டி.ஜி. காளிதாஸின் மாணவர்.

பிறப்பு, கல்வி

டி.பி.என். ராமநாதன் & ஜி. யுவராஜ் இணையினர்

பாண்டமங்கலம் ஜி. யுவராஜ் மே 9, 1990 அன்று தவில் கலைஞர் என். கணேசன், மல்லிகா தம்பதியருக்கு பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு தங்கை. பாண்டமங்கலம் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை பயின்றார்.

தனி வாழ்க்கை

பாண்டமங்கலம் ஜி. யுவராஜ் ஏப்ரல் 29, 2013 அன்று பிரியாவை திருமணம் செய்து கொண்டார். யுவராஜ், பிரியா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள், மகள்: தனுஷீ, மகன்: ஜெயவிஷ்ணு.

இசைப்பணி

பாண்டமங்கலம் ஜி. யுவராஜ் 2003 ஆம் ஆண்டு கரூர் அரசு இசைப்பள்ளியில் திருக்கடையூர் டி.ஜி. காளிதாஸிடம் மாணவராக சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் அவரிடம் நாதஸ்வரம் பயின்றார். 2005-ஆம் ஆண்டு நாதஸ்வரக் கலைஞர் பாண்டமங்கலம் வி. மணிவாசகத்துடன் இணைந்து தனது முதல் கச்சேரியை நிகழ்த்தினார். பின் மூன்று ஆண்டுகள் அவருடன் நாதஸ்வரக் கலைஞராக இருந்தார். கடந்து ஒன்பது வருடங்களாக திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதனுடன் இணைந்து கச்சேரி நிகழ்த்தி வருகிறார். வட அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனையிலும், மலேசியாவில் உள்ள கோவில் கச்சேரியிலும் பங்கேற்றுள்ளார். காஞ்சி காமகோடி மடத்தின் ஆஸ்தான வித்வான்.

விருதுகள்

  • ’கலை ஞான சிகரம்’, தென் சோழ மண்டல இசை வேளாளர் சங்கம்
  • ’பெருவங்கிய கலையரசு’ விருது
  • ’நாத சுககான ராகரத்னா’ விருது
  • ஒரத்தநாடு வட்ட இசைவேளாளர் சங்கம் விருது
  • தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை 'கலை வளர்மணி' விருது

இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.