சுரேஷ் பிரதீப்

From Tamil Wiki
சுரேஷ் பிரதீப்

சுரேஷ் பிரதீப் (சுரேஷ் பன்னீர்செல்வம்) ( 14.01.1992) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். தஞ்சை திருவாரூர் மாவட்டப் பின்னணியில் கதைகளை எழுதிவருகிறார். நேர்கோடற்ற வடிவில் கதைகள் எழுதுவதிலும் மனிதனின் அடிப்படையான இருத்தலியல் சிக்கல்களை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

பிறப்பு, கல்வி

திருவாரூர் மாவட்டம் தக்களூரில், பன்னீர்செல்வம், வசந்தா இணையருக்கு  14.01.1992 அன்று இரண்டாவது மகனாக பிறந்தார். திருவாரூரில் உள்ள கண்கொடுத்தவனிதம் அரசு தொடக்கப்பள்ளியில் 1996 தொடங்கி 2001 வரையிலும் பின்னர் கண்கொடுத்தவனிதம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2001 தொடங்கி 2006 வரையிலும், அதைத்தொடர்ந்து திரூவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில்  2006 தொடங்கி 2008 வரையிலும் பயின்றார். திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் 2010 ஆம் ஆண்டுபொறியியல் இளங்கலை படிப்பை நிறைவு செய்தார்.்.

தனி வாழ்க்கை

25.01.2021 அன்று பிரியதர்ஷினியை மணந்தார். சுரேஷ் பிரதீப் அஞ்சல்துறை ஊழியர். 

இலக்கிய பங்களிப்பு

சுரேஷ் பிரதீப்பின்முதல் படைப்பு 'அலுங்கலின் நடுக்கம்' எனும் சிறுகதை பதாகை மின்னிதழில் 2017 ஆம் ஆண்டு வெளியானது. அதே ஆண்டு அவருடைய முதல் நாவலான 'ஒளிர் நிழலும்' சிறுகதை தொகுப்பான 'நாயகிகள் நாயகர்களும்' வெளியாயின.

சிதறுண்ட வடிவத்தில் கதைக்குள் கதை எனும் தன்மையுடன் சொல்லப்பட்ட அவருடைய 'ஒளிர் நிழல்' நாவல் பரவலாக கவனிக்கப்பட்டது‌. 'பாரம்' 'எஞ்சும் சொற்கள்' ஆகிய சிறுகதைகள் அதன் பேசு பொருளும் கூர்மையான கூறுமுறைக்காகவும் வாசக கவனத்தைப்பெற்றன.

“வெவ்வேறு உத்திகளைக் கொண்டு மாறுபட்ட கதைசொல்லல் முறைகளைக் கையாண்ட போதிலும் சுரேஷ் பிரதீப்பின் பேசுபொருள் சாதிய அழுத்தங்களாலும் சீர்கெட்ட உறவுகளாலும் நவீன வாழ்வில் பெரும் மனச் சிதைவுக்கு உள்ளாகியிருக்கும் இன்றைய இளைஞர்களின், சமூகத்தின் தீர்வுகளற்ற கையறு நிலை என்பதால் இக்கதைகள் அழுத்தம் பெறுகின்றன.” என்று விமர்சகர் எம்.கோபாலகிருஷ்ணன் மதிப்பிடுகிறார்*

விருதுகள்/பரிசுகள்

  • வாசகசாலை சிறந்த அறிமுக எழுத்தாளர் விருது 2017
  • புதுமைப்பித்தன் குறுநாவல் பரிசு 2021- 'பத்து பாத்திரங்கள்'

நூல்பட்டியல்

  • ஒளிர்நிழல் நாவல் 2017
  • நாயகிகள் நாயகர்கள் சிறுகதை தொகுப்பு 2017
  • தன்வழிச்சேரல் கட்டுரைத் தொகுப்பு 2018
  • எஞ்சும் சொற்கள் சிறுகதை தொகுப்பு 2019
  • உடனிருப்பவன் சிறுகதை தொகுப்பு 2020
  • பொன்னுலகம் சிறுகதை தொகுப்பு 2021

உசாத்துணை

இணைய பக்கம்

sureshezhuthu.blogspot.com