being created

சிவ வடிவங்கள்

From Tamil Wiki
Revision as of 22:20, 2 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added stage template)
லிங்க மூர்த்தி
லிங்கோத்பவ மூர்த்தி

மும்மூர்த்திகளுள் ஒருவர் சிவபெருமான். லிங்க வடிவில் வழிபடப்படும் அவர், லிங்கமல்லாத வடிவிலும் வழிபடப்படுகிறார். அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவபெருமான் வழிபடப்படுகிறார். அருவ நிலை சிவபெருமானுக்குரியதாக 25 வடிவங்களை சைவ சித்தாந்தம் சுட்டுகிறது. சிவபராக்கிரமம் என்னும் நூல் சிவபெருமானுக்கு 64 வடிவங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது.

சிவனின் 25 வடிவங்கள்

சிவபெருமானுக்கு 25 வடிவங்கள் உள்ளதாக சைவ சித்தாந்தம் சுட்டுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நந்தி மண்டபத்தில் கீழ்காணும் சிவபெருமானின் 25 வடிவங்கள் உள்ளன.

எண் சிவ வடிவங்கள்
1 சந்திரசேகரர்
2 உமா மகேஸ்வரர்
3 ரிஷபாரூடர்
4 நடராஜர்
5 கல்யாண சுந்தரர்
6 பிட்சாடனர்
7 காம தகனர்
8 திரிபுராந்தகர்
9 சலந்தராரி
10 கஜசம்ஹாரர்
11 வீரபத்திரர்
12 சங்கர நாராயணர்
13 அர்த்த நாரீஸ்வரர்
14 கிராத மூர்த்தி
15 கங்காளர்
16 சண்டேச அனுக்ரஹர்
17 சக்கர தானர்
18 விக்னப்பிரசாதர்
19 சோமாஸ்கந்தர்
20 ஏகபாத மூர்த்தி
21 சுகாசனர்
22 தட்சிணாமூர்த்தி
23 வியாக்ரபாத மூர்த்தி
24 பதஞ்சலி மூர்த்தி
25 லிங்கோத்பவர்
காம தகன மூர்த்தி
கிராத மூர்த்தி
ரத்த பிட்சாடன மூர்த்தி

சிவனின் 64 வடிவங்கள்

சிவபராக்கிரமம் என்னும் நூல் சிவபெருமானுக்கு 64 வடிவங்கள் உள்ளதாகக் கூறுகிறது.

எண் பெயர் விளக்கம்
1 லிங்க மூர்த்தி சுயம்பு லிங்க வடிவம்
2 லிங்கோத்பவ மூர்த்தி லிங்கமாகத் தோன்றிய வடிவம்
3 முக லிங்க மூர்த்தி லிங்கத்தில் சிவமுகம் உள்ள வடிவம்
4 சதாசிவ மூர்த்தி ஐந்து முகத்துடன் கூடிய வடிவம்
5 மகா சதாசிவ மூர்த்தி இருபத்தி ஐந்து முகத்துடன் காட்சி தரும் வடிவம்
6 உமாமகேஷ்வர மூர்த்தி உமையுடன் பொருந்திய வடிவம்
7 சுகாசன மூர்த்தி நல்லிருக்கை நாதர்
8 உமேச மூர்த்தி உமையுடன் நின்றருளும் வடிவம்
9 சோமாஸ்கந்த மூர்த்தி உமை மற்றும் கந்தன் உடனாகிய வடிவம்
10 சந்திரசேகர மூர்த்தி பிறையைச் சூடியுள்ள வடிவம்
11 ரிஷபாரூட மூர்த்தி காளையின் மீது அமர்ந்திருக்கும் வடிவம்
12 ரிஷபாந்திக மூர்த்தி காளைக்கு அருள்புரிந்த வடிவம்
13 புஜங்கலளித மூர்த்தி பாம்புகளைக் காத்து அருளிய வடிவம்
14 புஜங்கத்ராச மூர்த்தி பாம்புகளை அடக்கிய வடிவம்
15 சந்த்யான்ருத்த மூர்த்தி மாலைநேர நடன வடிவம்
16 சதாநிருத்த மூர்த்தி எஞ்ஞான்றும் நடனமாடும் வடிவம்
17 சண்டதாண்டவ மூர்த்தி காளி காண நடனம் ஆடிய வடிவம்
18 கங்காதர மூர்த்தி கங்கையைத் தலையில் அணிந்த வடிவம்
19 கங்கா விசர்ஜன மூர்த்தி முடியிலிருந்து கங்கையை விடுவிடுக்கும் வடிவம்
20 திரிபுராந்தக மூர்த்தி திரிபுரம் எரித்த வடிவம்
21 கல்யாணசுந்தர மூர்த்தி மணக்கோல வடிவம்
22 அர்த்தநாரீஸ்வர மூர்த்தி உமையை இடப்பாகமாகக் கொண்ட வடிவம்
23 கஜயுக்த மூர்த்தி காயாசுரனைக் கொன்ற வடிவம்
24 ஜ்வராபக்ந மூர்த்தி சுரம் நீக்கும் வடிவம்
25 சார்த்தூலஹர மூர்த்தி புலியினை அழித்த வடிவம்
26 பாசுபத மூர்த்தி அர்ஜுனனுக்கு பாசுபதக் கணையை அளித்த வடிவம்
27 கங்காள மூர்த்தி வாமனனைக் கொன்று முதுகெலும்பினைக் கொண்ட வடிவம்
28 கேசவார்த்த மூர்த்தி மாலொரு பாகர் வடிவம்
29 பிச்சாடன மூர்த்தி பிட்சை ஏற்கச் செல்லும் வடிவம்
30 சரப மூர்த்தி சரப வடிவம்
31 சண்டேச அனுக்கிரக மூர்த்தி சண்டேசருக்கு அருளிய வடிவம்
32 தட்சிணாமூர்த்தி தென்முகக் கடவுள்
33 யோக தட்சிணாமூர்த்தி தவநிலைத் தென்முகக் கடவுள்
34 வீணா தட்சிணாமூர்த்தி வீணையேந்திய தென்முகக் கடவுள்
35 காலந்தக மூர்த்தி காலனைக் கொன்ற வடிவம்
36 காமதகன மூர்த்தி காமனை எரித்த வடிவம்
37 லகுளேஸ்வர மூர்த்தி புவனங்கள் தோறும் எழுந்தருளும் வடிவம்
38 பைரவ மூர்த்தி திகம்பரராக நாய் வாகனத்துடன் உள்ள வடிவம்
39 ஆபத்தோத்தரண மூர்த்தி முனிவர்களை ஆபத்திலிருந்து காத்த வடிவம்
40 வடுக மூர்த்தி முண்டாசுரனைக் கொன்ற வடிவம்
41 ஷேத்திரபாலக மூர்த்தி ஊழிக்காலத்தில் உலகைக் காத்த வடிவம்
42 வீரபத்ர மூர்த்தி அகோர வடிவத்தில் வீரத்துடன் உள்ள வடிவம்
43 அகோராஸ்த்ர மூர்த்தி சச்தந்துவைக் கொன்ற வடிவம்
44 தக்ஷ்யஜ்ஞஹ மூர்த்தி தட்சன் வேள்வியை அழித்த வடிவம்
45 கிராத மூர்த்தி வேட்டுவ வடிவம்
46 குரு மூர்த்தி குரு வடிவம்
47 அசுவாருட மூர்த்தி குதிரையேறிச் செல்லும் வடிவம்
48 கஜாந்திக மூர்த்தி ஐராவதத்திற்கு அருளிய வடிவம்
49 ஜலந்தரவத மூர்த்தி சலந்தரனைக் கொன்ற வடிவம்
50 ஏகபாதத்ரி மூர்த்தி ஒற்றைத் திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம்
51 த்ரிபாதத்ரி மூர்த்தி மூன்று திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம்
52 ஏகபாத மூர்த்தி ஒற்றைத் திருவடியுடைய வடிவம்
53 கௌரிவரப்ரத மூர்த்தி உமைக்குப் பொன்னிறம் அளித்த வடிவம்
54 சக்கரதான மூர்த்தி திருமாலுக்குச் சக்கரம் அளித்த வடிவம்
55 கௌரி லீலாசமன்வித மூர்த்தி உமையுடன் விளையாடல்கள் புரிந்த வடிவம்
56 விஷாபகரண மூர்த்தி நீலகண்டர்
57 கருடாந்திக மூர்த்தி கருடனுக்கு அருளிய வடிவம்
58 ப்ரம்ம சிரச்சேத மூர்த்தி பிரம்மாவின் தலையைக் கொய்த வடிவம்
59 கூர்ம சம்ஹார மூர்த்தி கூர்ம வடிவத் திருமாலை அடக்கிய வடிவம்
60 மச்ச சம்ஹார மூர்த்தி மச்ச வடிவத் திருமாலை அடக்கிய வடிவம்
61 வராக சம்ஹார மூர்த்தி வராக வடிவத் திருமாலை அடக்கிய வடிவம்
62 பிரார்த்தனா மூர்த்தி உமையின் ஊடலைத் தணித்த வடிவம்
63 ரத்த பிஷாப்ரதான மூர்த்தி தேவர்கள் உள்பட மால், அயன்களின் ஆணவத்தை அடக்கிய வடிவம்
64 சிஷ்ய பாவ மூர்த்தி முருகப்பெருமானுக்குச் சீடராக இருந்து ப்ரணவத்துக்குப் பொருள் கேட்ட வடிவம்

உசாத்துணை

{First review completed}}/n


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories. /n