அஞ்சலை
அஞ்சலை கண்மணி குணசேகரன் எழுதிய நாவல். கனடா இலக்கியத் தோட்டத்தின் விருது பெற்றது.
ஆசிரியர்
பதிப்பு
கதை மாந்தர்
- பாக்கியம்-மூன்று மகள்கள், ஒரு மகனின் அன்னை
- தங்கமணி-பாக்கியத்தின் முதல் மகள்
- கல்யாணி-பாக்கியத்தின் இரண்டாவது மகள்
- அஞ்சலை-பாக்கியத்தின் மூன்றாவது மகள்
- நிலா: அஞ்சலையின் முதல் மகள்; அஞ்சலைக்கும் ஆறுமுகத்துக்கும் பிறந்தவள்
- ராமு-அஞ்சலையின் தம்பி
- மண்ணாங்கட்டி-அஞ்சலையின் கணவன்
- ஆறுமுகம்- கல்யாணியின் கொழுந்தன், அஞ்சலையின் இரண்டாவது கணவன்
- அஞ்சலையின் ஓரகத்தி, அவள் கணவன், அஞ்சலைக்கும் மண்ணாங்கட்டிக்கும் பிறந்த இரு பெண்கள்
கதைச்சுருக்கம்
கார்குடலில், தாழ்த்தப்பட்ட வகுப்பில் கணவனை இழந்த பாக்கியத்திற்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மூன்றாவது பெண் அஞ்சலை மிகத்துணிச்சலான, வலுவுள்ள இளம்பெண். உர்ரரின் அலருக்கு பயந்து அஞ்சலைக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது முதல் அக்கா தங்கமணியின் கணவன் அவளை இளைய தாரமாகக் கேட்கிறான். நடக்காமல் போகவே, ஆள் மாறாட்டம் செய்து அண்ணனை மாப்பிள்ளை என்று காட்டி நோஞ்சானான மண்ணாங்கட்டிக்கு மணம் செய்து வைக்கிறான். மண்ணாங்கட்டி அவள்மேல் அன்புடன் இருந்தும் வெறுப்பு தீராமல் கொதிக்கும் அஞ்சலை வீட்டை விட்டு தாய்வீடு செல்கிறாள். வழியில் பார்த்த இரண்டாவது அக்கா கல்யாணி தன் வீட்டிற்குக் கூட்டி சென்று, தன் கொழுந்தனுக்குக் கட்டி வைக்கிறாள். வெண்ணிலா பிறக்கிறாள். தன் அக்காவுக்கும் கொழுந்தனுக்கும் தகாத உறவு இருப்பதை அறிந்து, மீண்டும் குழந்தையுடன் மண்ணாங்கட்டியிடம் போகிறாள். இரு குழந்தைகள் பிறக்கின்றன. நிலா தன் பாட்டியின் வீட்டில் மாமன் ஆதரவில் வளர்கிறாள். தம்பி அவளை மணம் செய்துகொள்வான் என்று அஞ்சலை நம்பியிருந்தபோது அவனுக்கு கல்யாணி தன் மகளைப் பேசி முடிக்கிறாள். தம்பியிடம் கெஞ்சி, அது பலனளிக்காததால் அஞ்சலை சாகப் போக, வெண்ணிலா 'இந்த மனிதர்களிடையே வாழ்ந்து பார்க்க வேண்டும்' என்று அவளைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறாள்.
உசாத்துணை
அழிவில்லாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை, ஜெயமோகன்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.