உதயசங்கர்

From Tamil Wiki
Revision as of 21:31, 23 June 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|உதயசங்கர் உதயசங்கர் (10 பெப்ரவரி 1960 ) (உதயஷங்கர்) தமிழ் எழுத்தாளர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயல்படுபவர். குழந்தை இலக்கியப் படைப்பாளி. குழந்தை எழுத்தாள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
உதயசங்கர்

உதயசங்கர் (10 பெப்ரவரி 1960 ) (உதயஷங்கர்) தமிழ் எழுத்தாளர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயல்படுபவர். குழந்தை இலக்கியப் படைப்பாளி. குழந்தை எழுத்தாளர் சங்க ஒருங்கிணைப்பாளர்

பிறப்பு, கல்வி

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் 10 பெப்ரவரி 1960 அன்று கமலம் - ச. கார்மேகம் இணையருக்குப் பிறந்தார். கோயில்பட்டி ஏ.வி.உயர்நிலைப்பள்ளியிலும் கோயில்பட்டி ஜி.வேங்கடசாமி நாயுடு கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டம்பெற்றார்.

தனிவாழ்க்கை

உதயசங்கரின் மனை பெயர் மல்லிகா. நவீனா, துர்கா என்று இரு மகள்கள். இந்திய ரயில்வே துறையில் நிலையத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.

அரசியல்

உதயசங்கர் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தொழிற்சங்கத்திலும், அதன் இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து பணியாற்றினார்.

அமைப்புப் பணிகள்

உதயசங்கர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பணியாற்றினார்.

1950 -இல் அழ வள்ளியப்பா தொடங்கிய குழந்தை எழுத்தாளர் சங்கம் நின்றபின் மாநில அளவில் சிறார் இலக்கியத்துக்கான அமைப்புகள் ஏதுமில்லாமல் இருந்த நிலையில் சிறார் எழுத்தாளர் சுகுமாரன் ஆகியோருடன் உதயசங்கர், மணிகண்டன் ஆகியோர் இணைந்து 2017ல் சென்னை போரூரில் தமிழக அளவில் சிறார் எழுத்தாளர் சங்கத்தை மீண்டும் நிறுவ முடிவெடுத்தனர். 13 ஜூன் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. உதயசங்கர் அதன் மாநிலத்தலைவராக பணியாற்றி வருகிறார்.

இலக்கியவாழ்க்கை

உதயசங்கர் 1978 முதல் கவிதைகள் கவிதைகள் எழுதத் தொடங்கினார். நாறும்பூநாதன் நடத்திய மொட்டுகள் என்னும் கையெழுத்துப் பத்திரிகையில் முதல் கதை வெளிவந்தது. கோயில்பட்டியின் இலக்கியச் சூழலுக்கு அதன்பின் அறிமுகமானார்

சிறுகதைகள்

உதயசங்கர் எழுதிய முதல் கதை 1980 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் செம்மலர் இலக்கிய இதழில் பிரசுரமானது. முதல் சிறுகதை நூல் ’யாவர் வீட்டிலும்’ 1988 - ஆம் ஆண்டு வெளியானது

மொழியாக்கம்

உதயசங்கர் 1986 ஆம் ஆண்டு வேளானந்தல் எனும் ஊரில் ரயில்வே ஊழியராக இருக்கையில் மலையாளம் கற்றுக்கொண்டார். 1995 முதல் மலையாளத்தில் இருந்து மொழியாக்கங்கள் செய்யத் தொடங்கினார். வைக்கம் முகமது பஷீர் எழுதிய சப்தங்கள் உள்ளிட்ட நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார்.

சிறார் இலக்கியம்

விருதுகள்

1993 லில்லி தேவசிகாமணி நினைவு விருது (நீலக்கனவு)

இலக்கிய இடம்

நூல்கள்

உசாத்துணை