being created

மு. பொன்னவைக்கோ

From Tamil Wiki
Revision as of 14:06, 23 June 2023 by Ramya (talk | contribs) (Created page with "மு. பொன்னவைக்கோ == வாழ்க்கைக் குறிப்பு == இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிறை பொன்னிக்கண்ணு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மு. பொன்னவைக்கோ

வாழ்க்கைக் குறிப்பு

இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிறை பொன்னிக்கண்ணு அம்மையாருக்கும் இளைய மகனாய்ப் பிறந்தவர். சொந்த ஊரில் அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், வழுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக்கல்வியும், மீனம்பாக்கம் அ.மா.ஜெயின் கல்லூரியில் புகுமுக வகுப்பும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இளநிலை (B.E.), முதுநிலை(M.Sc. (Eng) மின்பொறியீயல் கல்வியும், தில்லி இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் ஆய்வுப் படிப்பையும்( Ph.D) பயின்று பொறியாளர் ஆனவர். நாற்பது ஆண்டுகளாக இந்திய, வெளிநாட்டு நிறூவனங்கள் பலவற்றில் திட்டப் பொறியாளராக, திறமையான அதிகாரியாக, அறிவுரைஞராக, ஆய்வுநெறிகாட்டியாக , இயக்குநராக, துணைவேந்தராகப் பணியாற்றிய பெருமை பெற்றவர். சிறந்த ஆய்வாளர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியவர். நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டவர். மின்னமைப்பு வடிவமைப்பில் பல புதிய கண்டுபிடுப்புகளைக் கண்டுபித்தவர். அவர் கண்டுபிடிப்புகள் அவரது பெயரால் ”கோ மாதிரிகள்” என வழங்கப்படுகின்றன. உயர்கல்வி மேம்பாட்டிற்குப் பல திட்டங்களை வழங்கியவர். தமிழ்கப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் படிப்போர்க்கு ஆற்றல் கல்வி வழங்கி, பட்டம் பெற்றவுடன் பணியில் சேர வழி வகுத்தவர். பட்டப்படிப்பில் பயில்வோர் எம்மொழியினராயினும் தமிழைக் கட்டாயம் பயிலப் பாடத்திட்டம் வழங்கியவர். தனியாத தமிழ்ப் பற்றால் கணித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் முதல் இயக்குநர். இணையவழிக் கலிவிக்கு முதன் முதலாக வித்திட்டவர். புதிது புதிதாகப் புதுமைகளைப் படைப்பவர். உத்தமம் அமைப்பிற்குப் பெயர் சூட்டியவர். உலகத் தமிழ் தகவல் தொழிநுட்ப மன்றம்( உத்தமம்) International Fourm for Information technology in Tamil( INFITT)

இலக்கிய வாழ்க்கை

நூல் பட்டியல்

  • மெல்லத் தமிழ் இனி வெல்லும்
  • அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்
  • பொன்னவைக்கோ கவிதைகள்
கணிப்பொறி சார்ந்த நூல்கள்
  • கணிப்பொறியியல்
  • கணிப்பொறியும் தகவல் தொடர்பியலும்
  • HTML- ஓர் அறிமுகம்
  • C மொழி
  • ஸ்டார் ஆபிஸ்
  • விஷீவல் பேசிக்
  • ஜாவா
  • அறிவியல் தமிழ்க் கலைச்சொற்கள்
  • தமிழ்க் கணிப்பொறி மொழிகள்
  • இணையத் தமிழ் வரலாறு

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.