சி.எம் ஆகூர்

From Tamil Wiki
Revision as of 10:50, 12 June 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "சி.எம்.ஆகூர் (C. M. Agur) (1811- 1904) கிறிஸ்தவ அறிஞர், வரலாற்றாசிரியர். திருவிதாங்கூரின் கிறிஸ்தவச் சபை வரலாறு என்னும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர். ரெவெரெண்ட் மீட்டின் மகளை மணந்தவர். == பிறப்ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சி.எம்.ஆகூர் (C. M. Agur) (1811- 1904) கிறிஸ்தவ அறிஞர், வரலாற்றாசிரியர். திருவிதாங்கூரின் கிறிஸ்தவச் சபை வரலாறு என்னும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர். ரெவெரெண்ட் மீட்டின் மகளை மணந்தவர்.

பிறப்பு, கல்வி

சி.எம்.ஆகூரின் இயற்பெயர் கிறிஸ்டியன் மாசிலாமணி ஆகூர் (Christian Masillimani Agur ). 1811ல் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவ போதகரான சி.மாசிலாமணியின் ஐந்தாவது மகனாகப்பிறந்தார்.திருவனந்தபுரத்திலேயே ஆரம்பக்கல்வி பயின்றார். சீர்திருத்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்

தனிவாழ்க்கை

ஆகூர் திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் ரெசிடென்ட் கீழே அலுவலகப்பொறுப்பாளராகப் பணியாற்றினார். புகழ்பெற்ற ஆங்கிலேய கிறிஸ்தவ போதகர் ரெவெ. சார்ல்ஸ் மீட்டின் மகள் ஜோன்னா கார்லோட்டா( Joanna Carlotta) வை மணந்தார்.

வரலாற்றுப் பணி

சி.எம்.ஆகூர் எழுதிய திருவிதாங்கூர் கிறிஸ்தவ திருச்சபை வரலாறு ( ) திருவிதாங்கூரில் சீர்திருத்த கிறிஸ்தவம் உருவாகி வலுப்பெற்ற வரலாற்றை விவரிக்கும் முதன்மையான நூல். தென்தமிழகத்தின் வரலாற்றைச் சொல்லும் முதன்மையான ஆதாரநூலாகவும் இது கருதப்படுகிறது

மறைவு

அகூர் 1904ல் மறைந்தார். திருவனந்தபுரம் கிறிஸ்து தேவாலயத்தில் (Church of Christ) அடக்கம் செய்யப்பட்டார்.

உசாத்துணை

Christian Masillimani Agur Geni