யாழன் சண்முகலிங்கம்
From Tamil Wiki
Revision as of 23:37, 7 June 2023 by Tamizhkalai (talk | contribs)
யாழன் சண்முகலிங்கம் (அப்பு ஆர்ச்சி) கணினித்தமிழ் அறிஞர். யாழன் தமிழ் சொற்பகுப்பி என்ற மென்பொருளை பயன்படுத்தி பிரபலப்படுத்தினார்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழன்சண்முகலிங்கம் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மென்பொருள் பொறியாளராக அமெரிக்காவில் பணியாற்றி அங்கு குடியுரிமை பெற்றார்.
தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்
- ‘யாழன் தமிழ் சொற்பகுப்பி‘ என்ற தமிழ் மென்பொருளை 1995-ம் ஆண்டில் பயன்படுத்தி உலகளவில் தமிழர்களிடையே பிரபலப்படுத்தினார்.
- யாழன் விசைப்பலகையை 1993-ம் ஆண்டில் உருவாக்கி அதை தமிழர்களுக்கு அர்ப்பணித்தார்.
சிறப்பு
- 2010-ல் கோவையில் நடந்த உலக தமிழ் இணைய மாநாட்டு ஆய்வரங்குகளில் ஒன்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.