வானதி பதிப்பகம்
From Tamil Wiki
வானதி பதிப்பகம், 1955-ல், சென்னையில் தோற்றுவிக்கப்பட்டது. எழுத்தாளரும் இதழாளருமான ஏ. திருநாவுக்கரசு இப்பதிப்பகத்தைத் தொடங்கினார். கல்கியின் பொன்னியில் செல்வன் நாவலில் வரும் பாத்திரமான ‘வானதி’ பால் ஈர்ப்புக் கொண்ட திருநாவுக்கரசு, தன் பதிப்பகத்துக்கு இப்பெயரைச் சூட்டினார். வானதி பதிப்பகம் காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி தொடங்கி, ராஜாஜி, கல்கி, கண்ணதாசன், மு.மு. இஸ்மாயில், ஜெகசிற்பியன், சிவசங்கரி நூல்கள் என எட்டாயிரம் தலைப்புக்களுக்கு மேல் வெளியிட்டுள்ளது. கங்கை புத்தக நிலையம் என்பது இதன் துணைப் பதிப்பக நிறுவனமாகும்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.