கம்பநாதசாமி

From Tamil Wiki

கம்பநாதசாமி (பொயு 17 ) கொங்குமண்டல சதகங்களில் ஒன்றின் ஆசிரியர். துறவியாக வாழ்ந்தவர்

நூல்

கம்பநாதசாமி எழுதிய கொங்குமண்டல சதகம் கம்பநாத சாமி நூலில் 30 பாடல்கள் கிடைத்துள்ளன. ஐ. இராமசாமி (இக்கரை போளுவாம்பட்டி) இந்நூலை பதிப்பித்துள்ளார்.

காலம்

இந்நூலாசிரியரின் காலம் 17 ஆம் நூற்றாண்டு அல்லது அதற்குப்பின் என பதிப்பாசிரியர் ஐ.இராமசாமி கூறுகிறார்.

வரலாறு

கம்பநாத சுவாமி துறவியாக வாழ்ந்தவர் என்பதைப் பெயரிலிருந்தே அறிந்து கொள்ளலாம் இவர். 'மரபாள சூளாமணி' என வேறு ஒரு நூலையும் பாடியுள்ளார். அது 130 விருத்தங்கள் கொண்டது. அருண உற்பவம், வசிய உற்பவம், கோத்திர உற்பவம், ஆசார உற்பவம், வேத உற்பவம் எனும் பிரிவுகளை உடையது. இந்நூலை பெரியண்ணப்புலவர் என்பவர் விளக்கவுரையோடு எழுதிய ஏடு ஒன்று உள்ளது என்று பதிப்பாசிரியர் கருதுகிறார்

கம்பநாத சாமி திருவரங்கப் பெருமானை வணங்கிப்பாடியிருப்பதால் இவர் வைணவராக இருக்கலாம். என கருதப்படுகிறது

உசாத்துணை