under review

நோக்க பிழை

From Tamil Wiki
Revision as of 23:48, 23 March 2023 by Navingssv (talk | contribs) (Created page with "நோக்க பிழை (Intentional Fallacy): ஒரு இலக்கிய படைப்பிலுள்ள கருத்தையோ/பொருளையோ படைப்பாசிரியரின் நோக்கத்தைக் கொண்டு அப்படைப்பை அணுகும் பிழை. இது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ’புதுவி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நோக்க பிழை (Intentional Fallacy): ஒரு இலக்கிய படைப்பிலுள்ள கருத்தையோ/பொருளையோ படைப்பாசிரியரின் நோக்கத்தைக் கொண்டு அப்படைப்பை அணுகும் பிழை. இது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ’புதுவிமர்சன’ மரபு உருவான போது உருவான கலைச்சொல்.

கலைச்சொல் தோற்றம்

நோக்க பிழை (Intentional Fallacy): இக்கலைச்சொல்லை பொ.யு.1946 ஆம் ஆண்டு புதுவிமர்சன மரபை சேர்ந்தவர்களான டபிள்யூ.கே. விம்சாட் (W.K. Wimsatt), மோன்ரோ பியர்ட்ஸ்லே (Monroe Beardsley) முதன்முதலில் பயன்படுத்தினர்.

கலைச்சொல்

நோக்க பிழை (Intentional Fallacy): டபிள்யூ.கே.விம்சாட், மோன்ரோ பியர்ட்ஸ்லே ’தி வெர்பல் ஐகான்’ கட்டுரையில் இப்பிழையை பற்றி விளக்கினர். அதில், “ஒரு இலக்கிய படைப்பை புரிந்துக் கொள்ள முற்படும் போது அதன் ஆசிரியரின் நோக்கத்தை/கருத்தைக் கொண்டு படைப்பை அணுகும் பிழை” என இதை வகுத்தனர்.

மேலும் இருவரும், ”படைப்பாசிரியரின் நோக்கமோ, வடிவமோ ஒரு படைப்பின் கலை வெற்றியை மதிப்பிட தேவையற்றவை” என்றனர். இந்த கருத்து புதுவிமர்சனத்தின் ‘தன்னளவில் முழுமையான பிரதி (Autotetic Text)’ என்ற கருத்தோடு ஒத்தது. டி.எஸ். எலியட் இதனை பொ.யு. 1919 ஆம் ஆண்டு எழுதிய ’Tradition and the Individual Talent’ என்ற கட்டுரையில், “நேர்மையான விமர்சனமும், உள்ளார்ந்த பாராட்டும் படைப்பின் மீது தான் இருக்கவேண்டும். படைப்பாளி மீதல்ல” எனக் குறிப்பிடுகிறார்.

புதுவிமர்சன மரபில் உருவாகி வந்த இந்த கலைச்சொல் அதற்கு முந்தைய ரோமாண்டிக் காலகட்டத்தின் கருதுகோளான , ‘இலக்கியம் என்பது ஆசிரியரின் வெளிப்பாட்டின் ஊர்தி’ என்ற கருத்திற்கு முற்றிலும் எதிரானது. நவீனத்துவத்திற்கு பின் வந்த அமைப்புமையவாதம், பின்அமைப்பியல்வாதம் விமர்சன மரபினர் விம்சாட், பியர்ட்ஸ்லேயின் கலைச்சொல்லை மேலும் ஆராய்ந்தனர். இக்கலைச்சொல்லை அடியோட்டி பிரஞ்சு மொழியின் இலக்கிய விமர்சகரான ரோலாண்ட் பார்த் முன்வைத்த “டெத் ஆப் தீ ஆத்தர் (Death of the Author)” கருத்து இதற்கு மேலும் வலுசேர்த்தது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.