first review completed

வே.க. நாகமணிப்புலவர்

From Tamil Wiki
Revision as of 08:11, 16 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reset to Stage 1)

வே.க. நாகமணிப்புலவர் (1891-1933) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். வழிநடைச்சிந்து முக்கியமான படைப்பாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணத்தின் சப்த தீவுகளில் ஒன்றான நயினாதீவில் வே.க. நாகமணிப்புலவர் பிறந்தார். வீரகத்திப்பிள்ளை ஆசிரியரின் திண்ணைப்பள்ளியில் பயின்றார்.தில்லையம்பல் வித்தியாசாலை சோமசுந்தர ஐயரிடத்தில் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்றார். சிறிதுகாலம் யாழ்ப்பாணம் வணிகர்களுக்கு கணக்கெழுதும் தொழிலில் இருந்தார். நயினாத்தீவில் கிராம சங்கத்தலைவராக ஐந்தாண்டுகாலம் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

1902-ல் யாழ்ப்பாணத்தில் தர்மசீலரான வை. வல்லிபுரம் கட்டுவித்த கெங்கா சத்திரத்தின் பேரில் காரைதீவில் இருந்து வரும் வழி மார்க்கங்களைக் குறித்து வழிநடைச்சிந்து நாகமணிப் புலவர் பாடினார். இது வே.க.த. சுப்பிரமணியம் அவர்களால் ஸ்ரீ கணேச இயந்திரசாலையில் 1934-ல் பதிப்பிக்கப்பட்டது. நயினை நிரோட்டக யமகவந்தாதி, நயினை மான்மியம் ஆகிய நூல்களையும் எழுதினார்.

நூல்கள் பட்டியல்

சிந்து
  • வழிநடைச்சிந்து
பிற
  • நயினை நிரோட்டகயமகவந்தாதி
  • நயினை மான்மியம்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.