under review

காளியண்ண பிள்ளை

From Tamil Wiki
Revision as of 13:32, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)

காளியண்ண பிள்ளை (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். விநாயக புராண வசனம் நூல் முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

காளியண்ண பிள்ளை ஈரோடு மாவட்டம் பூந்துறையில் கருணீகர் குலத்தில் பிறந்தார். திருவாடுதுறையில் கல்வி கற்றார். பூந்துறை வாரணவாசிக் கவுண்டர் அழைத்ததால் அங்கு சென்று ஐம்பதாண்டுகள் தங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

இசைக்கவிதையும், வசைக் கவிதையும் பாடினார். தனிப்பாடல்கள், பாமாலைகள், செய்யுள்கள் பல பாடினார். விநாயக புராண வசனம் நூலை எழுதினார். பெரு நிலக்கிழார்கள் மீது கோவை, யமகம், மடல், அந்தாதி, மடக்கு முதலிய நூல்கள் பாடினார்.

பாடல் நடை

வசை

பாத்திபிடித் தேனோ படும்பாடு பட்டேனோ
ஏத்தலில் தண்ணீர் இறைத்தேனோ நேர்த்தியாய்க்
காய்த்தாயே கத்தரிக்காய் கற்றவற்கட் கில்லாமல்
பூத்தாயே பூத்தே இரு

நூல் பட்டியல்

  • விநாயக புராண வசனம்
  • பாமாலைகள்
  • ஆத்திச்சூடி வெண்பா

மறைவு

வேள்குறிச்சி வேலப்ப கவிஞருடன் தங்கியிருந்தபோது காலமானார்.

உசாத்துணை


✅Finalised Page