ப.முத்துக்குமாரசுவாமி

From Tamil Wiki
Revision as of 08:37, 11 December 2022 by Jeyamohan (talk | contribs)

ப.முத்துக்குமாரசுவாமி (மார்ச் 11, 1936 - அக்டோபர் 29, 2020) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர்.

(பார்க்க ப.முத்துக்குமாரசுவாமி (இசையறிஞர்) )

பிறப்பு

ப.முத்துக்குமாரசுவாமி திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறையில் மு. பஞ்சநாதம், மாரியம்மாள் இணையருக்குப் பிறந்தார். வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு முத்துக்குமாரசுவாமி தாய்வழியில் உறவினர். அதருமபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலை (புலவர்) இடைநிலைப் பட்டம் பெற்றார். சித்தாந்த சிரோமணி முத்துமணிவாசக முதலியார், பேராசிரியர் குருசாமி தேசிகர், சொ.சிங்காரவேலனார் ஆகியோரிடம் சைவசித்தாந்தம், தமிழிலக்கணம் ஆகியவற்றை கற்றார்.

இலக்கியப் பணி

1963 முதல் நூல்களை எழுத தொடங்கிய ப.முத்துக்குமாரசாமி இலக்கியம், சைவம், திருக்கோயில்கள், சுயமுன்னேற்றம் ஆகியவை சார்ந்து 170 நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் இலக்கியவளம், திருவாசகத்தேன், மெய்ப்பாட்டியல் ஆகிய நூல்கள் புகழ்பெற்றவை.

விருது

  • 2004 தமிழ் வளர்ச்சித் துறை விருது. (செந்தமிழ் முருகன் நூலுக்காக)
  • தமிழக அரசின் மறைமலையடிகள் விருது
  • கம்போடிய தமிழ்ச்சங்க விருது

நூல்கள்

உசாத்துணை

தமிழறிஞர் ப. முத்துக்குமாரசாமி மறைவு செய்தி, தினமணி