under review

ஒற்றன்

From Tamil Wiki
Revision as of 09:53, 29 November 2022 by Madhusaml (talk | contribs) (Moved to Final)
ஒற்றன்

ஒற்றன் ( 1984) அசோகமித்திரன் எழுதிய நாவல். அசோகமித்திரன் அயோவா பல்கலை கழகத்தில் இலக்கியப் பயிற்சி முகாம் ஒன்றுக்காகச் சென்றிருந்த அனுபவங்களை ஒட்டி இந்நாவலை எழுதினார். இதை அவர் தன் அனுபவக்கதைகளாக தனித்தனியாக எழுதி பின் நாவலாக ஆக்கினார்.

எழுத்து, வெளியீடு

அசோகமித்திரன் இந்நாவலை 1984ல் எழுதினார். க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. 1973ல் அசோகமித்திரன் அயோவா பல்கலைக் கழகத்தில் ஏழு மாத கால மாநாடு ஒன்றில் கலந்துகொண்டார். ஜப்பான், ஐரோப்பா, அமேரிக்கா, தென் கொரியா, வாட கொரியா, தைவான், இந்தியா, சிலி, பெரு, ஆப்பிரிக்கா போன்ற பல கண்டம் மற்றும் தேசங்களில் இருந்து எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள். அவ்வனுபவங்களை ஒட்டி இந்நாவலை அவர் எழுதினார்.

கதைச்சுருக்கம்

சென்னையில் இருந்து அசோகமித்திரன் அயோவா சென்று ஏழுமாத காலம் பயிற்சிபெற்று அங்கிருந்து விடைபெறுவது வரையிலான அனுபவங்களின் தொகுப்பாக இந்நாவல் அமைந்துள்ளது. இத்தாலிய எழுத்தாளரான இலாரியா, ஆப்ரிக்க எழுத்தாளர் அபே குபேக்னா, தென்னமேரிக்க எழுத்தாளர் பிராவோ, ஜப்பானிய எழுத்தாளர் கஜூகோ போன்ற பலர் இதில் கதைமாந்தர்கள்

இலக்கிய இடம்

ஒற்றன் அசோகமித்திரனின் நுண்ணியபகடிக்காக விரும்பப்படும் நாவல். இந்நாவலில் அமெரிக்காவின் சமூகவாழ்க்கையின் கீழ் அடுக்கின் சித்திரங்களும் உள்ளன. புனைவெழுத்தின் மர்மங்களைப் பேசும் பகுதிகளும் உள்ளன

உசாத்துணை


✅Finalised Page