ழ- சிற்றிதழ்

From Tamil Wiki
Revision as of 11:59, 8 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கவிஞர் ஆத்மாநாம் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய ‘ழ’ என்ற இதழ் 1978 மே முதல் பிரசுரம் பெற்றது. 1983 ஜனவரியில் அதன் 24- ம் இதழ் வந்த பின் அது தேக்கமுற்றது. பிறகு 1987-ல் ‘ழ’ மறுமலர்ச்சி பெ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கவிஞர் ஆத்மாநாம் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய ‘ழ’ என்ற இதழ் 1978 மே முதல் பிரசுரம் பெற்றது. 1983 ஜனவரியில் அதன் 24- ம் இதழ் வந்த பின் அது தேக்கமுற்றது. பிறகு 1987-ல் ‘ழ’ மறுமலர்ச்சி பெற்றது. கவிஞர் ஞானக்கூத்தின் அதன் ஆசிரியரானார். கவிதைகளையும், கவிதை சம்பந்தமான கட்டுரைகளையும் அது வெளியிட்டு வந்தது. 1988-ல் சில இதழ்கள் வந்தன. பின்னர் ‘ழ’ நின்று விட்டது.