under review

பிரேமஹாரம்

From Tamil Wiki
Revision as of 01:17, 2 May 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)

பிரேமஹாரம் (1955) பி.எஸ்.ராமையா எழுதிய நாவல். சிறுகதையாசிரியரான பி.எஸ்.ராமையா எழுதிய இந்நாவல் ஒரு குடும்பக்கதை. வரதட்சிணைக்கொடுமையைச் சித்தரிக்கிறது.

எழுத்து, பிரசுரம்

பிரேமஹாரம் 1955-ல் பி.எஸ்.ராமையாவால் எழுதப்பட்டது.திரைப்படமாக ஆக்கும் நோக்குடன் இதை எழுதியதாகவும் அது கைகூடவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்

கதைச்சுருக்கம்

இளமையில் திருமணமாகி கணவன்மேல் பெரும் பிரியத்துடன் இருக்கும் கதைநாயகி அவள் கணவன் வீட்டாரால் வரதட்சிணை கோரி கொடுமைப்படுத்தப்படுகிறாள். அவள் தந்தை கடன் வாங்கி பணம் கொடுத்தும், கெஞ்சி மன்றாடியும் அவள் கணவன் அவளை புறக்கணிக்கிறான். அவள் தந்தை கொஞ்சம் செல்வந்தரானபோது கணவன் அவளை தேடிவருகிறான். என்னுடைய காதல் ஆரத்தை நீங்கள் புறக்கணித்தீர்கள், ஆகவே உங்களை நான் புறக்கணிக்கிறேன் என்று அவள் அவனை நிராகரிக்கிறாள்.

இலக்கிய இடம்

இந்நாவல் இருபதாம்நூற்றாண்டில் இருந்த வரதட்சிணைக்கொடுமையை சித்தரிக்கிறது. பி.எஸ்.ராமையா இலக்கிய முக்கியத்துவம் கொண்ட ஆசிரியர் என்றாலும் இது பொதுவாசிப்புக்குரிய மிகையுணர்ச்சி நாவல். பி.எஸ்.ராமையாவின் நாவல்களில் இது குறிப்பிடப்படுகிறது


✅Finalised Page