under review

சாயாவனம் கனகஸபாபதிப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 16:15, 9 June 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)

சாயாவனம் கனகஸபாபதிப் பிள்ளை (ஜுலை 8, 1925 - செப்டெம்பர் 6, 1996) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

பூம்புகாரின் அருகே உள்ள சாய்க்காடு என்ற சாயாவனத்தில் தவிற்கலைஞர் பட்டுப்பிள்ளை - அம்மணி அம்மாள் என்பவர்களின் மகனாக ஜுலை 8, 1925 அன்று கனகஸபாபதிப் பிள்ளை பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள்.

தனது பாட்டனாரின் தம்பியான கோவிந்தஸ்வாமி பிள்ளையிடம் ஆறாம் வயதில் நாதஸ்வரப் பயிற்சியைத் தொடங்கி எட்டாண்டுகள் பயின்றார்.

தனிவாழ்க்கை

கீரனூர் பெரியதம்பிப் பிள்ளை என்ற நாதஸ்வரக் கலைஞரின் மகள் சுந்தராம்பாள்(பாப்பாத்தியம்மாள்) என்பவரை மணந்தார். இவர்களுக்கு மணி (நாதஸ்வரக் கலைஞர்), விஜயராகவன் (தவில்), உமாபதி, உதயகுமார், ராஜசேகரன் (தவில்), ராஜா என ஆறு மகன்கள்; பத்மாவதி, மணிமேகலை, திருபுரசுந்தரி , கோதை, வெற்றிச்செல்வி என ஐந்து மகள்கள்.

இசைப்பணி

கனகஸபாபதிப் பிள்ளை முதலில் இரண்டாண்டுகள் திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளையுடன் இணைந்து வாசித்தார். பின்னர் தனிக்குழு அமைத்துக் கச்சேரிகள் செய்யத் தொடங்கினார். ராக ஆலாபனையும் பிருகாக்களும் இவரது சிறப்பு. சாரங்கா, கேதார கௌளை, ஸாவேரி முதலிய ராகங்கள் இவர் வாசிப்பில் மகத்தானவை.

கனகஸபாபதிப் பிள்ளையின் மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர் கதிராமங்கலம் கந்தஸ்வாமி.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

சாயாவனம் கனகஸபாபதிப் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

  • நாங்கூர் செல்லையா
  • திருப்புங்கூர் கோவிந்தராஜ பிள்ளை
  • நாங்கூர் ராமு
  • நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை
  • நீடாமங்கலம் ஷண்முகவடிவேல்
  • வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை
  • யாழ்ப்பாணம் தக்ஷிணாமூர்த்தி

மறைவு

சாயாவனம் கனகஸபாபதிப் பிள்ளை செப்டெம்பர் 6, 1996 அன்று மறைந்தார்.

உசாத்துணை


✅Finalised Page