under review

குறுவழுதியார்

From Tamil Wiki

குறுவழுதியார் சங்க காலப் புலவர். அகநானூற்றில் இவர் பாடிய பாடல் ஒன்று உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் சங்க காலப் புலவர். ஆண்டர் மகன் குறுவழுதியாரும், குறுவழுதியாரும் வேறு வேறு என புலவர் கா. கோவிந்தன் தன் "தமிழ்ப்புலவர் வரிசை - 3" புத்தகத்தில் கூறினார்.

இலக்கிய வாழ்க்கை

அகநானூற்றில் உள்ள அகத்திணைப் பாடல் ஒன்றைப் பாடினார். இது தோழி தலைவனுக்குக் கூறும் கூற்றாக அமைந்த பாடல்.

பாடல் நடை

  • அகநானூறு

எல்லினைப் பெரிது எனப் பன்மாண் கூறிப்
பெருந்தோள் அடைய முயங்கி நீடுநினைந்து
அருங்கடிப் படுத்தனள் யாய்...
...
கழியும் கானலும் காந்தொறும் பலபுலந்து
வாரார்கொல் எனப் பருவரும்

உசாத்துணை


✅Finalised Page