தில்லைக் கலம்பகம்
தில்லைக் கலம்பகம் சிதம்பரத்தில் தில்லை அம்பலத்தில் கோயில் கொண்ட நடராசப் பெருமானின் பெருமையையும், தில்லைஅம்பலத்தின் சிறப்பையும் கூறும் கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய வகை நூலாகும். தில்லைக் கலம்பகத்தை இயற்றியவர் இரட்டைப் புலவர்கள்.
ஆசிரியர்
தில்லைக் கலம்பகத்தை இயற்றியவர்கள் இளஞ்சூரியர், முதுசூரியர் என்ற பெயருடைய இரட்டைப் புலவர்கள். 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப் புலவர்களில் ஒருவர் பார்வை இழந்தவர், மற்றவர் நடக்க முடியாதவர். பாடல்களின் ஒரு பாதியை ஒருவர் எழுத மற்றொரு பகுதியை மற்றவர் எழுதி பாடலை முடித்தனர்.
நூல் அமைப்பு
தில்லைக் கலம்பகம் காப்பு வெண்பாவும் 100 பாடல்களும் கொண்டது. சிவபெருமான் சிறப்பு, தில்லையை வழிபட்டோர், பஞ்சபூத தலங்கள், சிவபெருமான் தாண்டவமாடிய சபைகள், தில்லை அம்பலத்தின் நான்கு கோபுரங்கள், தீர்த்தங்கள், மூர்த்திகள், மண்டபங்கள் மற்றும் காமிகாகமம் (தில்லையில் பின்பற்றப்பட்ட ஆகமம்) முதலானவை இந்த நூலில் கூறப்பட்டுள்ளன.
சிறப்புகள்
கடல்விடம் நுகர்ந்த காசினி லிங்கம்
காஞ்சிமா நகருறை லிங்கம்;
காவிரி வடபால் வருதிரு ஆனைக்
காவினில் அப்புலிங் கமதாம்
வடதிசை அண்ணா மலையினில் லிங்கம்
வன்னியின் வடிவு; காளத்தி
வாயுலிங் கமதாம்; சிதம்பர லிங்கம்
மாசில்ஆ காயலிங் கமதாம்.
என்று காஞ்சீபுரம் – நிலம் (ப்ருத்வீ), திருவானைக்கா – நீர் (அப்பு),திருவண்ணாமலை – தீ (தேயு, வன்னி-அக்னி) , திருக்காளத்தி — காற்று (வாயு), சிதம்பரம் – வானம் (ஆகாயம்) ஆகிய பஞ்சபூத லிங்கங்களும், தலங்களும் குறிப்பிடப்படுகின்றன.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.