கங்காபுரம்

From Tamil Wiki
கங்காபுரம்

கங்காபுரம் ( 2019) அ.வெண்ணிலா எழுதிய வரலாற்று நாவல். ராஜேந்திர சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது. அரசியருக்கு முக்கியமான இடமளித்து எழுதப்பட்டிருப்பது இந்நாவலின் தனித்தன்மை

எழுத்து, வெளியீடு

கங்காபுரம் 2019 ல் அ.வெண்ணிலாவால் எழுதப்பட்டது. அ.வெண்ணிலாவின் அகநி வெளியீட்டகம் இந்நாவலை வெளியிட்டது

கதைச்சுருக்கம்

சோழ மாமன்னர் ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன். ராஜராஜசோழனின் பெரும்பாலான போர்வெற்றிகள் ராஜேந்திரசோழன் படைநடத்தி அடைந்தவை. ஆனால் ராஜராஜசோழனின் பெயருடன் இணைத்து இரண்டாமிடமாகவே ராஜேந்திரசோழன் குறிப்பிடப்பட்டார். ஐம்பது வயதில் ஆட்சிக்குவந்து எண்பத்திரண்டு வயதுவரை ஆட்சிசெய்தும் ராஜராஜனின் நிழல் தன்மேலிருந்து விலகவில்லையே என்ற ஏக்கத்துடனேயே மடிகிறான்.

இலக்கிய இடம்

ராஜேந்திரசோழனைப் பற்றி தமிழில் நாவல்கள் எழுதப்பட்டதில்லை. அவ்வகையில் கங்காபுரம் குறிப்பிடத்தக்கது. ’சோழப்பேரரசு அதன் உச்சத்தில் செயல்பட்டபோது இருந்த நடைமுறைகள், பல தொழில்களைச் செய்வோரின் வாழ்க்கை, கல்வெட்டுகள் மூலமாக இன்று நாம் அறிந்திருக்கும் அன்றைய தமிழ்மொழி, காதல், வீரம் என்று அனைத்தையும் புதிய பார்வையில் வெளிப்படுத்துகிறது’ என் விமர்சகர் சிவானந்தம் நீலகண்டன் இந்நாவல் பற்றி குறிப்பிடுகிறார்

உசாத்துணை