ரூத்தம்மானை
ரூத்தம்மானை கிறிஸ்தவ சிற்றிலக்கியங்களுள் ஒன்று. அம்மானை வடிவில் பாடப்பட்டது. இதனை இயற்றியவர் அருமை நாயகம் சட்டம்பிள்ளை.
ஆசிரியர்
ரூத்தம்மானை நூலின் ஆசிரியர் அருமைநாயகம் சட்டம்பிள்ளை. இவர் திருநெல்வேலி அருகேயுள்ள நாசரேத் ஊரில் வேதநாயகம் நாடார், தங்கம் அம்மாள் இணையருக்குப் பிறந்தவர். அருமைநாயகம் சட்டம்பிள்ளை இந்திய கிறிஸ்தவியல் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இந்தியாவின் பண்பாட்டை நிராகரிக்காமல் ஏசுவின் வழி மீட்பு என்னும் கிறிஸ்தவக் கருத்தியலை ஏற்றுக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவ இறையியலை உருவாக்கியவர். பிதா-சுதன்-ஆவி என்னும் திரித்துவத்தை முதன்மைப்படுத்தும் வழிபாட்டு மரபை கட்டமைத்தவர்.
வெளியீடு
ரூத்தம்மானை 1884 ஆம் ஆண்டு அருமைநாயகம் சட்டம்பிள்ளையால் வெளியிடப்பட்டது. பின் பல்வேறு மறுபிரசுரமும் கண்டுள்ளது.
நூல் அமைப்பு
ரூத்தம்மானை நூல் சிற்றிலக்கிய வகையில் அம்மானை வடிவில் பாடப்பட்டது. இந்நூல் ஐந்து பகுதிகளால் ஆனது.
- விவாகத்தால் ரூத்து இசரவேலை யொட்டினது விருத்தம்
- தெய்வபற்றத்தால் ரூத்து இசரவேலை யொட்டினது விருத்தம்
- நன்னடத்தையால் ரூத்து இசரவேலை யொட்டினது விருத்தம்
- சுதந்தர விவாகத்தால் ரூத்து இசரவேலை யொட்டினது விருத்தம்
- சந்ததி விருத்தியால் ரூத்து இசரவேலை யொட்டினது விருத்தம்
முதல் பகுதியில் 19 கண்ணிகள் உள்ளன. இதில் நகோமியின் வாழ்க்கை தொடக்கம் முதல் அவளது கணவன் மற்றும் மகன்களின் இறப்பு வரையிலான செய்திகளைக் கொண்டது.
உள்ளடக்கம்
பாடல் நடை
சிறப்பு
உசாத்துணை
- கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு, (பதிப்பாசிரியர்: யோ. ஞானசந்திர ஜாண்சன்), ஆசியவியல் நிறுவனம்.