under review

திரு பதிப்பகம்

From Tamil Wiki
Revision as of 19:25, 24 March 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Inserted READ ENGLISH template link to English page)

To read the article in English: Thiru Publications. ‎


Thiru

திரு பதிப்பகம்: (தொடக்கம் 2026) லண்டனை மையமாக்கிச் செயல்படும் ஆங்கிலப் பதிப்பகம். இது தென்னிந்திய நூல்களை ஆங்கிலம் வழியாகச் சர்வதேச வாசகர்களுக்குக் கொண்டுசெல்லும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இதன் துணை அலுவலகம் சென்னையில் உள்ளது.

தொடக்கம்

திரு பதிப்பகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு மொழிகளின் இலக்கியங்களை உலக வாசகர்களுக்குக் கொண்டுசென்று சேர்க்கும் நோக்கத்துடன் 2026ல் லண்டனில் தொடங்கப்பட்டது. சென்னையில் இதன் துணை அலுவலகம் அமைந்துள்ளது.

பணிகள்

திரு பதிப்பகத்தின் பணிகளாக இலக்கிய நூல்களை வெளியிடுதல், இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல், இலக்கிய விழாக்களை புரவலராக அமைந்து உதவுதல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் நிகழ்ந்த முதல் வாழும் தமிழ் இலக்கியத் திருவிழாவின் புரவலர்களில் திரு பதிப்பகமும் ஒன்று.

உசாத்துணை



✅Finalised Page