under review

பாத்திமா ரினோஸா முக்தார்

From Tamil Wiki
Revision as of 12:35, 28 January 2026 by Logamadevi (talk | contribs)

பாத்திமா ரினோஸா முக்தார் (பிறப்பு: அக்டோபர் 26, 1982) ஈழத்துப் பெண் எழுத்தாளர். சிறுகதைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பாத்திமா ரினோஸா முக்தார் இலங்கை நாட்டின் குருநாகல் மாவட்டம் பிரிங்கிரிய தேர்தல் தொகுதியில், உடுபத்தாவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆரிகாமத்தில் சுலைமான், ருகையா உம்மா இணையருக்கு அக்டோபர் 26, 1982-ல் பிறந்தார். குளி/யகம்வெல முஸ்லிம் பாடசாலையில் கல்விக் கற்றார்.

தனிவாழ்க்கை

பாத்திமா ரினோஸா முக்தாரின் கணவரின் பெயர் முக்தார். மூன்று பிள்ளைகள்.

இலக்கிய வாழ்க்கை

பாத்திமா ரினோஸா முக்தார் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம் ஆகியவை எழுதினார். இவரின் படைப்புகள் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை, வர்த்தக சேவை, தென்றல் சேவை, கொத்மலை சேவை, மலையக சேவை ஆகியவற்றிலும் நவமணி நாளிதழிலும், நேத்ரா தொலைக்காட்சி அலைவரிசையிலும், இலங்கையில் வெளியாகும் பல சஞ்சிகைகளிலும் வெளிவந்துகொண்டுள்ளன. இவரின் முதல் சிறுகதை "ஏழை வீட்டு ரோஜா" என்ற சிறுகதை. 'பேனா முனையின் நேசம்' என்ற சிறுகதைத் தொகுப்பு 2016-ல் வெளியானது.

விருதுகள்

  • வடமேல் மாகாண கலை கலாசார மன்றத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்டப் போட்டியில் பேனா முனையின் நேசம் முதல் பரிசை பெற்றது. அதே ஆண்டுக்குரிய சிறந்த நூலுக்கான விருதினையும் இந்நூல் பெற்றது.

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்பு
  • பேனா முனையின் நேசம் (2016)

உசாத்துணை

‎


✅Finalised Page