under review

திருக்கை வழக்கம்

From Tamil Wiki
Revision as of 16:02, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

திருக்கை வழக்கம் (12 ஆம் நூற்றாண்டு) செங்குந்த மரபில் வாழ்ந்த சான்றோர்களைச் சிறப்பித்துக் கலிவெண்பாவில் இயற்றப்பட்ட நூல். இந்நூலை இயற்றியவர் புகழேந்திப் புலவர்.

நூல் அமைப்பு

வேளாளரைப் பற்றித் 'திருக்கை.வழக்கம்' என்கிற நூல் பாடப்பட்டுள்ளதை அடியொற்றி, செங்குந்தரைப் பற்றிப் புகழேந்திப் புலவரால் பாடப்பட்ட நூல், திருக்கை வழக்கம். காப்புச் செய்யுள் தவிர்த்து இந்நூலில் 160 கண்ணிகள் இடம்பெற்றன

உள்ளடக்கம்

திருக்கை வழக்கம் நூலில் ஒவ்வொரு கண்ணியும் ‘கை' என்ற சொல்லில் முடிவடையும்படி இயற்றப்பட்டுள்ளது. கை என்னும் சொல் ஒழுக்கத்தைக் குறிக்கும். திருக்கை என்பது சிறந்த ஒழுக்கத்தைக் குறிக்கும். செங்குந்தர்களின் சிறந்த இயல்புகளையும், பழக்க வழக்கங்களையும் புகழ்ந்து கூறும் நூல் திருக்கை வழக்கம்.

பாடல்

செங்குந்தர் வீரம்

வாளிமுகம் பல்கோடி. வந்துறினு மஞ்சாத
ஆளிமுக னைச்செற்ற வாட்சிக்கை - பாளியுறு

பந்தரிற்சிங் கானனற்கும் பாகடுதோ லானனற்கு
மைந்தரிரு வோரை மடிக்குங்கை - சிந்துவினில்

வாகா ரிணியனை வாட்டித் துரத்தியுக்ர
மாகாளி யைத்தொண்டில் வைத்திடுகை - தீகான்

முகனனுப்ப வந்தவையை முன்னேத்தி நிற்ப
இகலவனை வாட்டிவைத்த வேண்கை - துகளிற்

புகலுடைய தம்பியரைப் பொன்றுவித்த கூற்றன்
விகலமுற வோலை விடுகை...

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Sep-2024, 17:03:02 IST