under review

எம்.ஆர். கோவிந்தசாமிப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 01:04, 14 August 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

எம்.ஆர். கோவிந்தசாமிப்பிள்ளை (ராஜா எம்.ஆர். கோவிந்தசாமிப்பிள்ளை) (பொ.யு. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர், சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர்.

வாழ்க்கைக் குறிப்பு

எம்.ஆர். கோவிந்தசாமிப்பிள்ளை புதியம்புத்தூர், முடிமன், குமாரபுரம் முதலிய ஊர்களை உள்ளடக்கிய எட்டையபுரம் சமஸ்தான மன்னர் ராஜா ஜெகவீர வெங்கடேசுர எட்டப்ப மன்னரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருந்தார். மன்னர் அவருக்கு நாடக மேடையில் அணியும் உடைகளைப் பரிசளித்தார். ராஜா வேடத்திலேயே பெரும்பாலான மேடைகளில் நடித்ததால் ராஜா எம்.ஆர். என்று அழைக்கப்பட்டார்.

நாடக வாழ்க்கை

எம்.ஆர். கோவிந்தசாமிப்பிள்ளை சங்கரதாஸ் சுவாமிகளின் அன்பைப் பெற்ற மாணவர். ’சந்தச் சரப சங்கீத சாகித்ய ராஜ போஜ ராஜா எம்.ஆர். கோவிந்தசாமி’ என நாடக உலகில் அழைக்கப்பட்டார். நாடக மேடையில் நின்ற நிலையில் சொந்தமாகவே கவிபாடும் திறனுள்ளவர். ராஜா வேடங்களிலேயே பெரும்பாலும் நடித்தார். டி.எஸ்.கண்ணுசாமிப் பிள்ளை இவருடன் பல நாடகங்களில் ராணி வேடமிட்டு நடித்தவர்.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Aug-2024, 18:49:19 IST