under review

தமிழ் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 20:06, 15 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
தமிழ்

தமிழ் (1911) சென்னையில் இருந்து வெளிவந்த இதழ்.

வெளியீடு

'/>மஹிமை தங்கிய ஐந்தாவது ஜார்ஜ் பெருமான் இந்திய சக்ரவர்த்தியாக டில்லியில் முடிசூடின நன்னாளிற் றொடங்கியது'/> என்ற அறிவிப்பை தலைப்பில் இட்டுக்கொண்டு தொடங்கப்பட்டது. '/>கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்கிற குறளை முகச்சொல் ஆகக் கொண்டது. டிசம்பர் 12, 1911 அன்று புத்தகம்-1 எண்-1 என்கிற வரிசை முறையில் தொடங்கப்பட்டது.

உள்ளடக்கம்

தமிழ் மொழியையும், கல்வி தொடர்பான செய்திகளையும் மக்களுக்குத் தருவதற்காகத் தொடங்கப்பட்ட இதழ் இது. பத்திரிகையின் ஆண்டுச் சந்தா தபாற் செலவு உள்பட ரூபாய் 1 என அறிவித்து, தமிழ் அபிமானிகளையும், கல்வியாளர்களையும் பத்திரிகைக்கு உதவக் கோரியது.

மூன்று இதழ்கள் கிடைத்துள்ளன. பத்திரிகையின் முன்னும் பின்னும் சிதைந்த நிலையில் உள்ளதால் வேறு செய்திகளை அறிய முடியவில்லை (தமிழம்)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:14 IST