under review

வசந்த் ஷிண்டே

From Tamil Wiki
Revision as of 11:59, 6 August 2025 by Madhusaml (talk | contribs)
வசந்த் ஷிண்டே

வசந்த் ஷிண்டே (பிறப்பு: ஜூன் 15, 1956) இந்தியாவின் தொல்லியல் ஆய்வாளர். 2011 முதல் 2016 வரை ராக்கிகர்ஹி-ல் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சிப் பணியின் ஆய்வாளர்களில் ஒருவர். முதன்முதலில் ஹரப்பா மக்களின் மண்டை ஓட்டு தொடர்பான ஆய்வுகளை மறுசீரமைப்பு செய்தவர். அகழ்வாராய்ச்சியில் மரபணு சோதனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வசந்த் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஜூன் 15, 1956-ல் பிறந்தார். பூனா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பூனா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறையில் முதுகலைப்பட்டம் முதல் வகுப்பில் பெற்றார். ”பழங்கால வரலாறு: தப்தி வடிநிலத்தில் ஆரம்பகால குடியேற்றங்கள்” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து பட்டம் பெற்றார். 1985-ல் டென்மார்க்கின் கோபென்ஹேகனிலும், 1989-90-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்ட மேற்படிப்பு படித்தார். விக்ரமசீலா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

ஆசிரியப்பணி

  • 1982 முதல் புனேயிலுள்ள டெக்கான் கல்லூரியில் தொல்லியல் துறையில் முதுநிலை மாணவர்களுக்கு பேராசிரியராக பணியில் இருந்தார். 1995 முதல் ஆய்வியல் நிறைஞர் கல்வி பெற்ற மாணவர்களுக்கு பேராசியர்.
  • 1987-1995 வரை திலக் மகாராஷ்டிரா வித்யாபீடத்தில் முதுகலை மாணவர்களுக்குப் பேராசிரியராக இருந்தார்.
  • 1991 முதல் புது தில்லியிலுள்ள 'Institute of Archaeology' கல்லூரியில் முதுகலை மாணவர்களுக்கு பேராசிரியராக பணியில் இருந்தார்.
  • புனேயின் டெக்கான் கல்லூரி ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார். இவரின் ஆசிரியத்துவத்தில் பல மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர். 2008 முதல் ஹங்கேரியில் உள்ள 'Eotvos Lorand University of Sciences' கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார்.
  • ஜப்பான் நாட்டின் க்யோட்டோவில் 'International Research Centre for Japanese Studies'-ல் வருகை தரு பேராசிரியராக இருந்தார். ஜப்பான் நாட்டின் க்யோட்டோவில் 'Research Institute for Humanity and Nature' ல் வருகை தரு பேராசிரியராக இருந்தார்.

அமைப்புச் செயல்பாடுகள்

  • தெற்காசிய தொல்பொருள் சங்கத்தின் (Society of South Asian Archaeology) நிறுவனர்.
  • பொது தொல்லியல் (Public Archaeology) துறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், பொது மக்களிடையே அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் குழுக்களை நிறுவியுள்ளார்.

பொறுப்புகள்

  • பெங்களூரிலுள்ள National Institute of Advanced Studies, IIC Campus-ல் துணைப் பேராசிரியர்
  • குஜராத்தின் காந்திநகரிலுள்ள National Maritime Heritage Complex-ன் தலைவர்
  • ராகிகர்ஹ் (Rakhigarhi) ஆராய்ச்சி திட்டதின் தலைவர்
  • புனேயிலுள்ள டெக்கான் கல்லூரியில் முதல்வர், பேராசிரியர்
ராக்கிகர்ஹி அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு (நன்றி: homegrown)

ஆய்வு வாழ்க்கை

  • 1980-90களில் மகாராஷ்டிரத்தின் தபதி (Tapti) வடிநிலத்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டார்.
  • 2006-11 காலகட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த ராக்கிகர்ஹி-ல் (தற்போதைய ஹரியானா மாநிலம்) அகழ்வாய்வுகளில் ஈடுபட்டார்.

2019-ல் டேவிட் ரீச்-உடன் (David Reich) இணைந்து "An Ancient Harappan Genome Lacks Ancestry from Steppe Pastoralists or Iranian Farmers" என்ற ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். இதன் வழியாக சிந்து சமவெளி மக்கள் இந்தோ-ஆரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஆய்வு முடிவை முன்வைத்தார். சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் அனடோலியா, ஸ்டெப்பி பகுதியைச் சேர்ந்த மூதாதையர்களின் தொடர்ச்சி இல்லை என்று ஆய்ந்து கூறினார். இது ஏற்கனவே அறிஞர்களால் நம்பப்பட்ட இந்தோ-ஆரிய புலப்பெயர்வு கோட்பாட்டை (Indo-Aryan migration theory) கேள்விக்குள்ளாக்கியது.

நூல் பட்டியல்

  • Early Farming Community in the Central Tapi Basin (Study of Settlement and Subsistence Patterns) 1998
  • Chalcolithic South Asia: Aspects of Crafts and Technologies
  • Cultural Heritage of South Asia and Beyond Recent Perspective
  • Excavations at Gilund: The Artifacts and Other Studies
  • Ancient Indian Knowledge System : Archaeological Perspective (2017)
  • Bharatiya Knowledge Systems (2022)
  • The Heritage Sites of Gujarat: A Gazetteer
  • Gilund Project: Excavations in a Regional Context
  • Harappan Necropolis at Farmana in the Ghaggar Basin
  • Human Skeletal Assemblage from the Harappan Site of Farmana: A Bio-archaeological Analysis
  • New Perspectives on the Harappan Culture in Light of Recent Excavations at Rakhigarhi: 2011–2017, Volume 1: Bioarchaeological Research on the Rakhigarhi Necropolis (editor, together with Dong Hoon Shin) (Archaeopress Publishing Ltd) (2023)
  • Excavations at Kaothe 1990
  • A Report on the Excavations at Farmana (2007-08): (A Harappan site in the Ghaggar Basin)
  • Harappan Necropolis at Farmana in the Ghaggar Basin (2009-2010)
  • 2011 Excavations at Farmana, District Rohtak, 2006-2008.
  • Excavations at Girawad, District Rohtak, Haryana, India 2006.

உசாத்துணை

இணைப்புகள்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.