எம்.கே. சானு

From Tamil Wiki
Revision as of 09:47, 3 August 2025 by Jeyamohan (talk | contribs) (Created page with "எம். கே. சானு 17 அக்டோபர் 1928ல் பழைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் ஆலப்புழையிலுள்ள தும்போளி என்னும் ஊரில் மிகப்பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் இளமையிலேயே தந்தை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எம். கே. சானு 17 அக்டோபர் 1928ல் பழைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் ஆலப்புழையிலுள்ள தும்போளி என்னும் ஊரில் மிகப்பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் இளமையிலேயே தந்தை மறைந்தார். அவருடைய வணிகம் பங்குதாரர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடும் வறுமை வந்து சேர்ந்தது. பலருடைய உதவியால் படிப்பை தொடர்ந்தார். மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

எம்.கே.சானு நான்கு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கல்லூரி ஆசிரியராக ஆனார். 1958ல் பள்ளி மாணவர்களுக்காக எழுதிய ’ஐந்து அறிவியல் மேதைகள்’ அவருடைய முதல் நூல். 1960ல் தன் முதல் இலக்கிய விமர்சன நூலை எழுதினார், ’காற்றும் வெளிச்சமும்’ என்னும் அந்நூல் அன்று பேசப்பட்ட ஒன்று.

எம்.கே.சானு மாஸ்டர் கேரளத்தின் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டவர். கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் (புரோகமன கலா சாகித்ய சங்கம்) தலைவராக 1986 முதல் பணியாற்றினார். 1987ல் எர்ணாகுளம் சட்டச்சபை தொகுதியில் இடதுசாரி வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். இன்று (2 ஆகஸ்ட் 2025) காலையில் தன் 97 ஆவது அகவையில் மறைந்தார்.