first review completed

வே. நந்தகோபாலன்

From Tamil Wiki
Revision as of 18:39, 11 September 2022 by Ramya (talk | contribs)
வே. நந்தபோபாலன் (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)
வே. நந்தகோபாலன்

வே. நந்தகோபாலன் ( பிறப்பு:பிப்ரவரி 21, 1960) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். காத்தவராயன் கூத்துக் கலைஞராக நினைவுக்கூறப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை, வடமராட்சியில் கற்கோவளம் பருத்தித்துறையில் பிப்ரவரி 21, 1960-ல் நந்தகோபாலன் பிறந்தார்.

கலை வாழ்க்கை

1980 முதல் பல சிறிய நாடகங்களில் நடித்தார். காத்தவராயன் நாடகத்தில் நடுக்காத்தான் பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். 1999-ல் கற்கோவளம் வேணுகான சபாமன்றம் அண்ணாவியாராகப் பதவியேற்ற பின்பு ஊர் பெரியோர்களை அழைத்து காத்தவராயன் நாடகத்தைப் பழக்கி கும்பிஅம்பாள் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமியில் அரங்கேற்றினார். காத்தவராயன் நாடகம் முப்பத்தியாறு தடவை மேடையேறி வடமராட்சியில் புகழ்பெற்றது. 1992-ல் பதினாறு வயதுப் பெண் பிள்ளைகளுக்குக் காத்தவராயன் நாடகத்தைப் பழக்கி தும்பளை, நெல்லண்டை பத்திரகாளியம்மன் ஆலயத்தில் அரங்கேற்றினார்.

1993-ல் சத்தியவான் சாவித்திரி நாடகம், அரிச்சந்திர மயானகாண்டம் ஆகிய இரு நாடகங்களையும் பழக்கி கும்பி அம்பாள் ஆலயத்தில் அரங்கேற்றினார். இந்த நாடகங்களில் நாரதராகவும், அரிச்சந்திரனாகவும் நடித்தார். 1997-ல் சிறுவர்களுக்கு காத்தவராயன் நாடகத்தைப் பழக்கி பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம் நடத்திய காத்தவராயன் நாட்டுக் கூத்துப் போட்டியில் பெரிய கலைஞர்களுடன் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பெற வைத்தார்.

விருதுகள்

  • அரிச்சந்திரன் நாடகத்திற்காக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அரங்கேற்றிய கூத்துகள்

  • காத்தவராயன் கூத்து
  • சத்தியவான் சாவித்திரி
  • அரிச்சந்திர மயானகாண்டம்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.