being created

வேட்கை முந்துறுத்தல்

From Tamil Wiki
Revision as of 03:19, 17 July 2025 by Jayashree (talk | contribs)

வேட்கை முந்துறுத்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட பெண் த வேட்கையைத் தெரிவித்தலைக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கையில் வேலினை ஏந்திய தலைவனிடம் தொடியணிந்த தோளினை உடையாள் தன் வேட்கையைக் கூறுதல்’ என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

கைஒளிர் வேலவன் கடவக் காமம்
மொய்வளைத் தோளி முந்துற மொழிந்தன்று(கொளு 16.1)

வெண்பா

எழுது எழில் மார்பம் எனக்கு உரித்தாக என்று
அழுது அழுது வைகலும் ஆற்றேன் - தொழுது இரப்பல்
வல்லியம் அன்ன வயவேலோய் வாழ்க என
அல்லியம் தார் நல்கல் அறம் (306)

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.