தாபத வாகை
தாபத வாகை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. தாபதம் என்பது நோன்பைக் குறிக்கும் தவம் செய்யும் முனிவரின் சிறப்பைக் கூறுவது தாபத வாகை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தவம் செய்பவர்கள் தாம் செய்யும் தவத்தோடு பொருந்தி, அவ்வொழுக்கத்திலிருந்து பிறழாத தன்மையைக் கொண்டவர்களின் சிறப்பைக் கூறுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
தாபத முனிவன் தவத்தொடு முயங்கி
ஓவுதல் அறியா ஓழுக்கு உரைத்தன்று(கொளு 8.14)
வெண்பா
நீர்பலகால் மூழ்கி நிலத்தசைஇச் தோலுடீஇச்
சோர்சடைதாழச் சுடர் ஓம்பி - ஊர்அடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோமபல்
வானகத்து உய்க்கும் வழி (168)
பொருள்: பலகாலும் நீரில் மூழ்கியும், வெற்றுநிலத்தில் படுத்தும், மான்தோலை உடுத்தும்,நெகிழ்ந்த சடையுடன் வேள்வித் தீயைப் பாதுகாத்து, மக்கள் வாழும் ஊரிடத்தே உணவு வேண்டிச் செல்லாமல், கானகத்தில் கிடைக்கும் காய்கனி கிழங்கு இலை முதலானவற்றை உட்கொண்டவராய், அவற்றாலே கடவுளையும் விருந்தினரையும் பேணியவராய் ஒழுகுதல், ஒருவரை வானகத்தே கொண்டு செலுத்தும் தவநெறியாகும்.
உசாத்துணை
வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.