ஸ்வாமிநாத ஆத்ரேயன்
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உபன்யாசகர், இசைவல்லுநர் எனப் பன்முக அடையாளத்துடன் இலக்கிய உலகில் செயல்பட்டவர் ஸ்வாமிநாத ஆத்ரேயன் (ஸ்வாமிநாத ஆத்ரேயர்); (ஸ்வாமிநாத ஆத்ரேயா) (1919-2013). தஞ்சை எழுத்தாளர்கள் பலருக்கு முன்னோடியாகவும், நண்பராகவும் திகழ்ந்தவர். ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் வரிசையில் இடம் பெறுபவர். தமிழ், சம்ஸ்கிருதம் முறையாகக் கற்றவர். ‘ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத சம்ஸ்தான்’ விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நெருக்கமான சீடர்களுள் ஒருவர்.
பிறப்பு, கல்வி
ஸ்வாமிநாத ஆத்ரேயன், அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ‘சிமிழி’ என்ற சிற்றூரில், வேத பண்டிதர், சம்ஸ்கிருத அறிஞர் ‘சிமிழி’ வெங்கட்ராம சாஸ்திரிகளுக்கு மகனாகப் பிறந்தார். தமிழை முறைப்படிக் கற்ற ஸ்வாமிநாத ஆத்ரேயன், அண்ணாமலைப் பல்கலையில் சம்ஸ்கிருதம் பயின்று, ‘வ்யாகரண சிரோமணி’ பட்டம் பெற்றார். படிக்கும் காலத்திலேயே தனது திறமை காரணமாக துணைவேந்தர், ‘ரைட் ஹானரபில்’ சீனிவாச சாஸ்திரியின் அன்பையும் பாராட்டுதலையும் பெற்றார்.
தனி வாழ்க்கை
படிப்பை முடித்ததும் தந்தை வழியில் சிலகாலம் உபன்யாசகாரக இருந்தார். சிறிதுகாலம் சென்னை குப்புசுவாமி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். ஜயலக்ஷ்மியுடன் திருமணம் நிகழ்ந்தது.
இலக்கிய வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.