ஜார்ஜ் திபாட்

ஜார்ஜ் திபாட். ஜார்ஜ் ஃப்ரெடரிக் வில்லியம் திபாட் (George Frederick William Thibaut ) (20 மார்ச் 1848 – 1914) ஜெர்மானிய இந்தியவியல் அறிஞர். பிரம்ம சூத்திரம் முதலிய நூல்களை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்தவர். வாரணாசி சம்ஸ்கிருத கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்திய வானவியல், கணிதவியல் ஆகியவற்றிலும் ஆய்வுகளைச் செய்தார்.
பிறப்பு, கல்வி
திபாட் ஜெர்மனியில் ஹெய்டல்பர்க் (Heidelberg) என்னும் ஊரில் 20 மார்ச் 1848ல் பிறந்தார் . தத்துவ இயல்பில் பட்டம் பெற்றபின் சிறிதுகாலம் பிரிட்டனில் வாழ்ந்தார்.
கல்விப்பணி
1875ல் திபாட் வாரணாசி அரசு சம்ஸ்கிருதக் கல்லூரியில் பேராசிரியராக பணியேற்றார். 1888 முதல் 1895 வரை அலஹாபாதில் மூர் மத்தியக்கல்லூரியில் (Muir Central College ) பணியாற்றினார். அலாஹாபாத் பல்கலையின் பதிவாளராகவும் பணியாற்றினார். கல்கத்தா பல்கலைகழக பதிவாளர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
விருது
திபாட் 1906 ல் ஏழாம் ஜார்ஜ் மன்னர் அளித்த புத்தாண்டு விருதுகளில் CIE விருதைப் பெற்றார்.
மறைவு
திபாட் 10914ல் பெர்லினில் (Berlin-Lichterfelde) மறைந்தார்.